crisis between reporters and police in poes garden
ஜெயலிதாவின் அண்ணன் மகள் தீபா, போயஸ் கார்டனுக்கு சென்றார். அவரது ஆதரவாளர்களுடன் அங்கு சென்றதால், பரபரப்பு ஏற்பட்டது. சசிகலா மற்றும் தினகரன் ஆதரவாளர்கள் தீபாவை தடுத்து நிறுத்தினர். இதனால், அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதை அறிந்ததும் அனைத்து பத்திரிகை, ஊடக செய்தியாளர்கள் அங்கு சென்றனர். இதற்கிடையில், அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போட்டப்பட்டது. பத்திரிகையாளர்களை தடுத்து நிறுத்தினர். இதனால், அவர்களுக்குள் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

இந்த வேளையில் தீபாவின் கணவர் மாதவன், அங்கு சென்றார். நீண்ட நேரத்துக்கு பின், அவரை மட்டும் போலீசார் அனுமதித்தனர். அவருடன் 2 பேர், போயஸ் கார்டன் வீட்டுக்கு சென்றனர்.
ஆனால், பத்திரிகையாளர்கள் அவரை பின் தொடர்ந்து சென்றனர். ஆனால், அவர்களை போலீசார் அனுமதிக்கவில்லை. இதுபற்றி கேட்டதற்கு உங்களை அனுமதி கூடாது என மேலிட உத்தரவு என போலீசார் கூறினர். யார் அந்த உத்தரவை பிறப்பித்தது என கேட்டதற்கு, பதில் கூற மறுத்துவிட்டனர்.

போயஸ் கார்டனில் உள்ள தீபாவிடம் கேட்டபோது, போயஸ் கார்டன் வீட்டை மீட்பதற்காக, தனது சகோதரர் தீபக் வர சொன்னதாக தெரிவித்தார்.
போயஸ் கார்டன் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால், அங்கு பரபரப்பு நிலவுகிறது. இதேபோல் போயஸ் கார்டன் பகுதியை சேர்ந்தவர்களையும் போலீசார் அனுமதிக்க மறுக்கின்றனர். இதனால், அனைத்து தரப்பினரும் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
