Asianet News TamilAsianet News Tamil

ஊரடங்கு உத்தரவை மீறிய கிரிக்கெட் வீரர். காரை பறிமுதல் செய்து போலீசார் நடவடிக்கை.!!

ஊரடங்கு நேரத்தில் காரில் வலம் வந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் காரை பறிமுதல் செய்து செய்திருக்கிறது சென்னை போலீஸ்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Cricketer defying curfew. Police confiscate the car.
Author
Tamilnadu, First Published Jun 26, 2020, 7:05 AM IST

ஊரடங்கு நேரத்தில் காரில் வலம் வந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் காரை பறிமுதல் செய்து செய்திருக்கிறது சென்னை போலீஸ்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Cricketer defying curfew. Police confiscate the car.

சென்னையில் கடந்த 19ம் தேதி முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  அத்தியாவசிய பொருட்கள் வாங்க மக்கள் அவர்கள் வீட்டின் அருகே உள்ள 2 கிலோ மீட்டர் தொலைவில்தான் செல்ல வேண்டும். பைக் மற்றும் கார்களை பயன்படுத்த கூடாது. மீறினால் சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்கு பதிவு செய்து வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்று போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரிக்கை விடுத்திருந்தார்.


 கடந்த சனிக்கிழமை திருவான்மியூர் பகுதியில் சாஸ்திரி நகர் போக்குவரத்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஹோண்டா சிஆர்வி கார் ஒன்று வேகமாக வந்தது. இதை பார்த்த போக்குவரத்து போலீசார் காரை வழிமறித்து விசாரணை நடத்தினர். அப்போது  அடையார் பகுதியில் இருந்து மளிகை மற்றும் காய்கறிகள் வாங்க  திருவான்மியூரில் உள்ள கடைக்கு  காரில் வந்தாக காரை ஓட்டி வந்த நபர் தெரிவித்தார்.

 

 கொரோனவைரஸ் தொற்றால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க கார் மற்றும் பைக் பயன்படுத்த கூடாது என்று எச்சரித்தது போலீஸ். அப்போது காரில் வந்த நபர்; தான் யார் என்பதை போலீஸிடம் சொல்லவில்லை.போலீசார் வழக்கு பதிவு செய்து முடித்ததும் காரை பார்க்கிங் பகுதியில் நிறுத்தச்சொல்லியிருக்கிறார்கள். அதன் பிறகு தான் அங்கிருந்த போலீசார் ஒருவர் இவரு கிரிக்கெட் வீரர் ராபின் சிங் ஆச்சே என்று சொல்ல மற்ற போலீசாருக்கெல்லாம் முகம் சிவந்து போனது. கடைசி வரைக்கும் தான் யார் என்று சொல்லாமல் சட்டத்திற்கு தலைவணங்கியிருக்கிறார் ராபின்சிங்.
அத்ன பிறகு தன்னுடைய வீட்டில் இருந்து வேறுவொரு காரை வரச்சொல்லி அதில் வீட்டிற்கு சென்றிருக்கிறார் ராபின்சிங். தான் யாரென்று சொல்லாமல் நின்றிருந்தது போலீசாருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. காரணம் சின்ன பிரச்சனையாக இருந்தாலே தான் யார் என்பதை அதிகார மையம் வரைக்கும் அலற விடும் இந்த காலத்தில் ராபின்சிங் அலப்பறை இல்லாமல் நடந்துகொண்டதை போக்குவரத்து போலீசார் பாராட்டி வருகின்றனர்.  

Follow Us:
Download App:
  • android
  • ios