ஸ்ரீமதி மரணம் தற்கொலை தான்.! உயர்நீதிமன்ற கருத்துக்கு உச்சநீதிமன்றம் மறுப்பு- வரவேற்பு தெரிவித்த சிபிஎம்

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி வழக்கின் தன்மை குறித்து உயர்நீதிமன்றத்தின் கருத்துக்கு உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், தாமதமின்றி குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. 

CPM welcomed the Supreme Court opinion regarding the death of Srimathi

மாணவி ஸ்ரீமதி மரணம்

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பான உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்திற்கு சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தையே உலுக்கிய கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பள்ளியின் தாளாளர், செயலாளர், முதல்வர் உள்ளிட்ட ஐந்து பேரை கடந்த 29.8.2022 அன்று சென்னை உயர்நீதிமன்றம் பிணை வழங்கியது. அப்போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவருமே நிரபராதிகள் எனவும், அவர்கள் அனைவரும் எவ்வித முகாந்திரமுமின்றி கைது செய்யப்பட்டது தேவையற்றது என்றும், மாணவியின் மரணத்தில் எவ்வித சந்தேகத்திற்கும் இடமே இல்லை எனவும், அது தற்கொலை தான் என்றும் குறிப்பிட்டிருந்தது.

CPM welcomed the Supreme Court opinion regarding the death of Srimathi

உயர்நீதிமன்ற கருத்திற்கு எதிர்ப்பு

சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்தக் கருத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சுட்சி தனது ஆட்சேபணையை தெரிவித்ததுடன், பிணை மனுவினை விசாரிக்கும் போது வழக்கு தொடர்பான தகுதி (மெரிட்ஸ்) குறித்து விவாதிக்கக் கூடாது என உச்சநீதிமன்ற தீர்ப்பைச் சுட்டிக்காட்டியும், முழுமையான விசாரணைக்கு முன்னதாகவே நீதிமன்றம் இம்முடிவுக்கு வந்துள்ளது குற்றவியல் நடைமுறைக்கு எதிரானது என்றும், சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வரும் நிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாகவே நீதிமன்றம் இம்முடிவுகளுக்கு வந்திருப்பது அந்த வழக்கின் விசாரணையை சிதைக்கும் என்றும் கருத்து தெரிவித்தது. சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த கருத்துக்கு ஸ்ரீமதியின் பெற்றோரும் கடும் ஆட்சேபனையை தெரிவித்ததுடன்,

CPM welcomed the Supreme Court opinion regarding the death of Srimathi

விசாரணை பாதிப்பு

இக்கருத்துகள் வழக்கு விசாரணையை பாதிக்கும் என்பதை சுட்டிக்காட்டி, பிணையை ரத்து செய்ய வேண்டுபென உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் "உயர்நீதிமன்ற நீதிபதியின் கருத்துகள் பிணை வழங்கப்படலாமா வேண்டாமா என்பது குறித்து மட்டுமே இருந்திருக்க வேண்டும் என்றும், உயர்நீதிமன்ற நீதிபதி பினை மனு மீதான விசாரணையில் வழக்கு தொடர்பான தகுதிகள் (மெரிட்ஸ்) குறித்து இந்தளவுக்கு விவாதித்திருப்பது முற்றிலும் அநாவசியமானது என்றும் தனது தீர்ப்பில் கூறியுள்ளனர். மேலும், பிணை மனு மீதான விசாரணையின் போது, வழக்கு குறித்து விரிவாக விவாதிக்கூடாது என்பது ஏற்களவே சட்டரீதியாகத் தெளிவுபடுத்தப்பட்ட விஷயம் என்பதைத் தெளிவுபடுத்திய உச்சநீதிமன்றம், 

CPM welcomed the Supreme Court opinion regarding the death of Srimathi

குற்றவாளிக்கு தண்டனை

இந்த வழக்கு குறித்து உயர்நீதிமன்றம் தெரிவித்த எந்த கருத்துகளையும் பிரதான வழக்கு விசாரணையின்போது விசாரனை நீதிபதி கணக்கில் எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. இப்பின்னணியில் ஸ்ரீமதியின் பரணம் தொடர்பான வழக்கினை விசாரித்து வரும் சிபிசிஐடி காவல்துறையினர் எந்த அழுத்தத்திற்கும் இடம் தராமல் நேர்மையான முறையில் விசாரணையை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதுடன், குற்றமிழைத்தோருக்கு உரிய தண்டனை வழங்கிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்திக் கேட்டுக் கொள்வதாக கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

பாலியல் குற்றவாளிகளை பாதுகாப்பது தான் பாஜகவின் பண்பாடா.? வீராங்கனைகளை போராட வைப்பது தான் தேசபக்தியா.? சீமான்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios