Asianet News TamilAsianet News Tamil

இது திட்டமிட்ட படுகொலை... போலீஸ் தண்டனை கொடுப்பது விபரீதம்... என்கவுன்டருக்கு எதிராக கொந்தளித்த பாலகிருஷ்ணன்!

ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் இதயத்தையே உலுக்கியது. இந்தக் கொடூரத்தை நிகழ்த்தியவர்களுக்கு அதிகபட்ச தண்டனை கொடுக்க வேண்டும். அரசியல் சட்டம் வகுத்தளித்திருக்கிற அடிப்படையில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தின் மூலம் தண்டனை வழங்கப்படவேண்டுமே தவிர என்கவுன்ட்டர் செய்வது ஏற்புடையதல்ல. 

CPM Tamil nadu Secretary slam on hyderabad encounter
Author
Chennai, First Published Dec 7, 2019, 8:31 AM IST

ஹைதராபாத்தில் நான்கு பேரையும் துப்பாக்கியால் சுட்டு சாகடித்ததை திட்டமிட்ட படுகொலையாகப் பார்க்கவேண்டியுள்ளது என்று சிபிஎம் தமிழ் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.CPM Tamil nadu Secretary slam on hyderabad encounter
ஹைதராபாத்தில் கால் நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி கொடூரமாகப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரை போலீஸார் என்கவுன்டர் மூலம் சுட்டுக்கொன்றார்கள். இந்த நடவடிக்கையை வரவேற்றும் எதிர்த்தும் பல்வேறு கருத்துகள் சொல்லப்பட்டுவருகின்றன. இந்நிலையில் இந்த என்கவுன் டர் குறித்து சிபிஎம் தமிழ் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிறகு கருத்து தெரிவித்துள்ளார்.

CPM Tamil nadu Secretary slam on hyderabad encounter
 “ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் இதயத்தையே உலுக்கியது. இந்தக் கொடூரத்தை நிகழ்த்தியவர்களுக்கு அதிகபட்ச தண்டனை கொடுக்க வேண்டும். அரசியல் சட்டம் வகுத்தளித்திருக்கிற அடிப்படையில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தின் மூலம் தண்டனை வழங்கப்படவேண்டுமே தவிர என்கவுன்ட்டர் செய்வது ஏற்புடையதல்ல. தண்டனை வழங்கும் அதிகாரத்தை காவல்துறை எடுத்துக்கொள்வது விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும்.

CPM Tamil nadu Secretary slam on hyderabad encounter
அந்த நால்வரும் தப்பி ஓடும்போது சுட்டதாகப் பார்க்கும்போது தெரியவில்லை. அதிகாலையில் பொதுமக்கள் மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் நடந்துள்ளது. ஒருவேளை நால்வரும் தப்பி ஓட முயன்றாலும் காலில்தான் சுடுவார்கள். நான்கு பேரையும் துப்பாக்கியால் சுட்டு சாகடிப்பது என்பது திட்டமிட்ட படுகொலையாகப் பார்க்கவேண்டியுள்ளது. இந்த நடவடிக்கை ஏற்புடையதல்ல.CPM Tamil nadu Secretary slam on hyderabad encounter
பெண்ணுக்கு கொடுமை இழைத்த குற்றவாளிகளுக்கு தண்டனையே கொடுக்கக் கூடாது என்பதல்ல வாதம். தண்டனை வழங்க நமது சட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி  தண்டனை கொடுக்கவேண்டுமே தவிர காவல் துறையே தண்டனையைக் கொடுத்தால் அப்பாவிகளும் இந்தக் கொடுமைக்கு உள்ளாகிற நிலை ஏற்படும்” என்று பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios