Asianet News TamilAsianet News Tamil

இந்தியா அழிவதை அனுமதிக்க முடியாது... வெள்ளை அறிக்கை வெளியிடுங்க... மோடி அரசை விளாசிய சீதாராம் யெச்சூரி!

நாட்டின் பொருளாதார மந்தநிலை தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் எதிர்பார்த்த அளவை (6.9 சதவீதம்) விட குறைவாகவே இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. அதாவது, 6.1 சதவீதமாகவே இருக்கும் என ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது. 

CPM Secretary Sitaram yechury slam modi government on indian economic
Author
Delhi, First Published Oct 5, 2019, 8:18 AM IST

நாட்டின் பொருளாதார நிலை குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.CPM Secretary Sitaram yechury slam modi government on indian economic
இந்தியாவின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளதாக தொடர்ச்சியாக தகவல்கள் வருகின்றன. வேலையிழப்பு, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவு, வசூலாகாத வாராக்கடன்கள், பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி போன்ற பல்வேறு காரணங்களால் இந்தியா பொருளாதாரம் தள்ளாடிவருவதாகக் கூறப்படுகிறது. கடந்த காலாண்டில் இந்திய உள் நாட்டு மொத்த உற்பத்தி 5 சதவீதமாகவும் குறைந்துள்ளது. மேலும் கடந்த மாதம் ஜி.எஸ்.டி. மிகக் குறைவாக வசூலாகி அதிர்ச்சி அளித்திருக்கிறது.

CPM Secretary Sitaram yechury slam modi government on indian economic
நாட்டின் பொருளாதார மந்தநிலை தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் எதிர்பார்த்த அளவை (6.9 சதவீதம்) விட குறைவாகவே இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. அதாவது, 6.1 சதவீதமாகவே இருக்கும் என ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது. இதனால், இந்திய பொருளாதாரம் மேலும் பின்னடைவை சந்திக்குமோ என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பொருளாதார வீழ்ச்சி தொடர்பாக மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கண்டனம் தெரிவித்துள்ளது.

CPM Secretary Sitaram yechury slam modi government on indian economic
இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி ட்விட்டர் பக்கத்தில் தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார். “உள்நாட்டு உற்பத்தி விகித மதிப்பீட்டை ரிசர்வ் வங்கி கணிசமாக குறைத்துள்ளது. ஆனால், இந்த உண்மை நிலையை மறைக்க மத்திய அரசு நீண்ட காலமாகவே முயற்சித்து செய்து வருகிறது. ஆனால், இனியும் இதை மறைக்க முடியாது. நாட்டின் பொருளாதார நிலை குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இப்படி இந்தியாவின் எதிர்காலம் அழிந்துகொண்டிருப்பதை அனுமதிக்க முடியாது’ என்று மத்திய அரசுக்கு எதிராக கடுமையாக சீதாராம் யெச்சூரி விமர்சித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios