ஆர்எஸ்எஸ் அமைப்பின் சார்பில் மதுராவில் ‘தீன தயாள்தாம்’ என்ற மருந்தகம் நடத்தப்பட்டுவருகிறது. இந்த ஆர்எஸ்எஸ் மருந்தகம் மூலமாக, பசுமாட்டின் சாணத்தில் இருந்து செய்யப்பட்ட குளியல் சோப்புகள், ஷாம்புகள், முகத்திற்கான கிரீம், சிறுநீரில் தயாரிக் கப்பட்ட ஜூஸ், ஜாம், டூத் பேஸ்ட்ஆகியவற்றை தயாரித்து விற்பதென ஆர்எஸ்எஸ் முடிவு செய்துள்ளது.

இந்தப் பொருட்களை அக்டோபர் மாதத்தில் இருந்து அமேசான் ஆன்-லைன் நிறுவனம் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என்று ஆர்எஸ்எஸ் செய்தித்தொடர்பாளர் அருண் குமார் கூறியுள்ளார்.

இவை மட்டுமன்றி, பிரதமர் மோடி அணியும் குர்தா போன்ற ஆடைகள், உத்தரப்பிரதேச சாமியார் முதலமைச்சர்  ஆதித்யநாத் அணியும் ஜிப்பா போன்ற ஆடைகளும் ‘தீன தயாள் தாம்’ மூலம் விற்கப்படஉள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், மோடி, ஆதித்யநாத் ஏற்கெனவே பயன்படுத்திய துணிகள் மற்றும் கர்சீப்புக்களும் விற்பனைக்கு வைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக ஒவ்வொரு மாதமும் மருந்துப் பொருட்களை ரூ. 1 லட்சத்துக்கும், ஆடைகளைரூ. 3 லட்சத்துக்கும் விற்பனைசெய்ய இலக்கு நிர்ணயித்துள்ளதாக கூறியுள்ள அருண் குமார்,இதன்மூலம் உள்நாட்டு மக்களுக்குஅதிகமான வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.

தீன தயாள் தாம்’ மருந்தகத்தின் செயலாளர் மணிஷ் குப்தா அளித்துள்ள பேட்டியில், பசுவின் சிறுநீர் மற்றும் சாணத்தை மூலப்பொருட்களாக வைத்து பல்வேறு மருந்துப்பொருட்களை தயாரித்துள்ளதாகவும், நீரழிவு நோயாளிகளுக்கான மருந்து, உடல்பருமனைக் குறைக்கும் மருந்துகள், சோப்பு, ஷாம்பு,பற்பசை, முகம் சுத்தம் செய்யும் கிரீம், ஊதுபத்தி போன்றவையும் கூட தயாரிக்கப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த புதிய தொழிலுக்காக, பல்வேறு இடங்களில் இருந்துபசுமாட்டின் சிறுநீர், சாணத்தைச் சேகரித்து வருவதாகவும், தங்கள் நிறுவனத்திற்குச் சொந்தமாகவே 90 பசுக்கள் இருக்கும் நிலையில், 10 வேலையாட்கள் மூலம் இங்கும் சாணத்தையும், சிறுநீரையும் சேமிக்க உள்ளதாகவும் மணிஷ் குப்தா கூறியுள்ளார்.

இந்த பொருட்கள் மிகக் குறைந்த பட்சமாக 10 ரூபாய் முதல்230 ரூபாய் வரையிலான விலையில் விற்பனை செய்யப்படும் என்றும்,மோடி, ஆதித்யநாத் பயன்படுத்துவது போன்ற குர்தாக்கள் தலா220 ரூபாய் விலையில் விற்பனைசெய்யப்படும் என்றும் கூறியுள்ளார். இதற்காக சுமார் 10 குர்தா மாடல்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாகவும், மேலும், மோடி, ஆதித்யநாத் ஏற்கெனவே பயன்படுத்திய ஆடைகள், கர்சீப்புகளும் கூட விற்பனைக்கு வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்