பசு மாட்டிற்கு பழம் கொடுக்கும் போது பாஜக மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் எம்.பி.,யின் கட்டை விரலை மாடு கடித்து விட்டது. 

கர்நாடகத்தில், உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடத்தப்பட உள்ளது. இதனிடையே பாஜக சார்பில் 30 மாவட்டங்களிலும் 62 சுவராஜ்ஜிய மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.  அதன்படி உடுப்பியில் நேற்று இந்த மாநாடு நடந்தது. இதில் கலந்துகொள்ள பாஜகமாநில தலைவர் நளின்குமார் கட்டீல் எம்.பி. உடுப்பிக்கு வந்தார். பின்னர் அவர் உடுப்பியில் உள்ள கிருஷ்ணா மடத்திற்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்தார். அப்போது அவர் மடத்தில் உள்ள பசுமாட்டிற்கு கோபூஜை செய்து வழிபட்டார். 

அங்கு இருந்த பசு மாட்டிற்கு அவர் பழம் கொடுத்தார். அப்போது நளின்குமார் கட்டீலின் கட்டை விரலை அந்த மாடு கடித்துவிட்டது. இதனால் அவர் வலியில் துடித்தார். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.