தடுப்பூசி கண்டுபிடிப்பிற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்ட விஞ்ஞானிகளுக்கும், இந்தியாவுக்கும் வாழ்த்துகள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் தயாரித்துள்ள கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக்  நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் ஆகிய கொரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த மருந்துகளை அவசரகால நோக்கில் பயன்படுத்திக்கொள்ளலாம் என இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு கூறி உள்ளது. இதனையடுத்து இந்த இரண்டு மருந்துகளும் விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளன. இதனை பிரதமர் மோடி வரவேற்றுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு வலுப்படுத்தும் வகையில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. கொரோனா இல்லாத மற்றும் ஆரோக்கியமான இந்தியா என்ற நோக்கத்தை விரைவுபடுத்தும் வகையில், சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு இந்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது. தடுப்பூசி கண்டுபிடிப்பிற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்ட விஞ்ஞானிகளுக்கும், இந்தியாவுக்கும் வாழ்த்துகள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.