ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வரும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவருமான சிபு சோரன் மற்றும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

சீனாவின் பிறப்பிடமான கொரோனா வைரஸ் அழையா விருந்தாளியாக 200க்கும் மேற்பட்ட நாடுகளில் அடியெடுத்து வைத்து பெரும் உயிர் பலியை ஏற்படுத்தி வருகிறது. ஏழை, பணக்கார நாடுகள் என்ற பாரபட்சம் இல்லாமல் மனித குலத்திற்கு எதிராக வந்து நிற்கிறது. கண்ணுக்கே தெரியாத அந்த நுண்ணுயிரியிடமிருந்து தற்காத்துக்கொள்ள மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். மேலும், கொரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வரும்  மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள், அரசியல்வாதிகள் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் முதல்வர்  சிபு சோரனுக்கு  கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. 

இந்த தகவலை சிபுசோரன் ரூபி சோரன் தம்பதியரின் மகனும், மாநில முதல்வருமான ஹேமந்த் சோரன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில் தனது தந்தைக்கும், தாய்க்கும் வெள்ளிக்கிழமை இரவு கொரோனா தொற்று உறுதியானதாகவும், அவர்கள் வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெறுவதாகவும் தெரிவித்துள்ளார். 

வரும் திங்களன்று முதல்வர் ஹேமந்த் சோரன், மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு வரும் திங்களன்று கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என தகவல் தெரிவத்துள்ளார்.