இந்தியாவில் 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 9,987 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,66,598 ஆக அதிகரித்துள்ளது. 

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக நாளுக்கு நாள் வேகமெடுத்து வருகிறது. கொரோனா அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகளும் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில், இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் புதிதாக 9,987 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,66,598ஆக அதிகரித்துள்ளது. அதில்,1,29,917 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,29,215 பேர் சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரசால் 331 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7, 466 ஆக அதிகரித்துள்ளது.  உயிரிழப்பு விகிதம் 2.8 சதவீதமாக உள்ளது.

இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் 88,528 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,169ஆக உயர்ந்துள்ளது. 33,229 பாதிப்பு 286 உயிழப்புடன் தமிழகம் 2வது இடத்தில் உள்ளது. 29,943 பாதிப்பு 874 உயிரிழப்புடன் டெல்லி 3வது இடத்தில் உள்ளது. 20,545 பாதிப்புடன் குஜராத் 4வது இடத்தில் இருந்து வருகிறது.