ரஜினிக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திராவிடர் விடுதலைகழகம் சார்பில் தொடக்கப்பட்ட அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 

பெரியாரை பற்றி துக்ளக் விழாவில் ரஜினி அவதூராக பேசியதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திராவிடர் விடுதலைகழகம் சார்பாக பல்வேறு இடங்களில் புகார் அளிக்கப்பட்டது. திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் அளித்த புகார் மனுமீது நடவடிக்கை எடுத்து ரஜினியை கைது செய்ய உத்தரவிட வேண்டும் என திராவிடர் விடுதலை கழக சென்னை மாவட்ட செயலாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதேபோல கோவையை சேர்ந்த திராவிடர் விடுதலை கழக நிர்வாகி நேருதாஸ் ஆகியோர்  உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போதுகாவல்துறைக்கு அவகாசம் வழங்கிய பின்னர்தான் நீதிமன்றத்தை அணுகி இருக்க வேண்டும். புகார் கொடுத்த 15 நாட்களுக்கு முன்பாகவே நீதிமன்றத்தை அணுகியது ஏன்? ஆகையால் இந்த இரு வழக்குகளும் தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிபதி உத்தரவிட்டார்.