court can not interfere in government decision said high court
பேருந்து கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரணைக்கு உகந்தது அல்ல என தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கடந்த 19ம் தேதி அறிவித்து அதற்கு மறுநாளான 20ம் தேதியிலிருந்து பேருந்து கட்டணத்தை அரசு உயர்த்தியது. சுமார் 50%லிருந்து 100% வரை பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தினக்கூலி மற்றும் மாத ஊதியதாரர்கள் கடுமையான நிதிநெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.


இதற்கிடையே, பேருந்து கட்டண உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டு பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அந்த மனுக்களை இன்று விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது. சலுகைகள், மானியங்கள் வழங்குவது அரசின் கொள்கை முடிவு. அரசு தன்னிச்சையாக முடிவெடுத்தாலும் கூட அதில் நீதிமன்றம் தலையிட முடியாது. அரசு நிர்வாகத்தை நீதிமன்றம் நடத்த முடியாது.
ஆனால், புதிய பேருந்து கட்டண அட்டவணையை பேருந்துகளில் ஒட்ட வேண்டும் என உத்தரவிட்டு, மனுக்களை தள்ளுபடி செய்தது.
