முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 22ம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர், சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், லண்டனில் இருந்து டாக்டர் ரிச்சர்ட், அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து, அவரது பரிசோதனை ஆய்வுகளை பார்த்து, அதற்கான சிகிச்சை முறைகளை கூறினார். அதன்படி அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையொட்டி முதலமைச்சர் ஜெயலலிதா, உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாவும், விரைவில் வீடு திரும்புவதாகவும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அவ்வப்போது, அறிக்கை வெளியிட்டு வருகிறது.

இதற்கிடையில், அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர், தமிழகம் முழுவதும் பல்வேறு கோயில்களில் வேண்டுதல்கள், பூஜைகள், யாகங்கள், தேர் இழுத்தல் போன்று ஆன்மிக வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

முதலமைச்சர் ஜெயலலிதாவின், உடல்நலகுறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ள தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா குணமாக அவரது தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பல்வேறு பிரத்தனை மற்றும் வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த அம்மாவசை அன்று பூசாரி ஒருவர், அப்பல்லோ மருத்துவமனை நுழைவாயில் முன்பு பூஜை பரிகாங்கள் செய்தார். இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவ அமைப்பினர் தனித்தனியாக குழு அமைத்து, பிரார்த்தனைகளை செய்தனர்.

இந்நிலையில், நெல்லை மாவட்டம் , சங்கரன் கோவில் நகர் மன்ற உறுப்பினர் நாகரத்தினம் என்பவர், முதலமைச்சர் ஜெயலலிதா பூரண உடல்நலம் பெற வேண்டி பிரார்தனை செய்து வருகிறார். இதற்காக அவர், குறத்தி வேடமிட்டு அப்பகுதியில் உள்ள கடைகளில் காணிக்கை வசூலித்து, அந்த தொகையை கோவில் உண்டியலில் நேர்த்தி கடனாக செலுத்தி வழிப்பட்டு வருகிறார்.