Asianet News TamilAsianet News Tamil

அ.தி.மு.க ஆட்சியில் ஆவின் பணி நியமனத்தில் ஊழல் முறைகேடு... சிக்கலில் ராஜேந்திர பாலாஜி..!

பணி நியமன முறைகேட்டில் உயர் அதிகாரிகளின் தவறான வழிகாட்டுதல்களும், நிர்வாக குளறுபடிகளும் நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
 

Corruption in the appointment of Avin in the AIADMK regime ... Rajendra Balaji in trouble ..!
Author
Tamil Nadu, First Published Jun 30, 2021, 11:50 AM IST

பணி நியமன முறைகேட்டில் உயர் அதிகாரிகளின் தவறான வழிகாட்டுதல்களும், நிர்வாக குளறுபடிகளும் நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் 25 மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியங்கள் உள்ளன. இந்த ஒன்றியங்களில் பணி நியமனங்களை தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றியே நியமிக்க வேண்டும். ஆனால் மதுரை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருப்பூர், நாமக்கல், திருச்சி, விருதுநகர், தேனி, தஞ்சாவூர் ஆகிய யூனியன்களில் 236 பணி நியமனங்கள் முறைகேடாக நடைபெற்றுள்ளதாக ஆவின் நிர்வாகத்திற்கு தொடர்புகார்கள் சென்றது. உதாரணமாக, துணை மேலாளர் பணி இடத்திற்கு தேர்வு செய்யப்பட்டவர் எழுத்து தேர்வில் 29 மதிப்பெண்கள் பெற்றதாக மதிப்பீட்டு பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.Corruption in the appointment of Avin in the AIADMK regime ... Rajendra Balaji in trouble ..!

ஆனால், நேர்முக குழு 31 மதிப்பெண்கள் கொடுத்து முறைகேடாக பணி நியமனம் செய்ததாக புகார்கள் வந்தது. இதேபோன்று 8 மாவட்டங்களில் கடந்த ஆட்சியில் நியமிக்கப்பட்ட பல்வேறு பணிகளில் முறைகேடு நடந்திருப்பதாக கூறப்படுகிறது.Corruption in the appointment of Avin in the AIADMK regime ... Rajendra Balaji in trouble ..!

பணி நியமன முறைகேட்டில் உயர் அதிகாரிகளின் தவறான வழிகாட்டுதல்களும், நிர்வாக குளறுபடிகளும் நடந்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது. இந்த நிலையில், இந்த பணி நியமன முறைகேடுகள் குறித்து விரிவான விசாரணை நடத்த ஆவின் நிர்வாகம் ஊழல் தடுப்பு பிரிவிற்கு பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios