Asianet News TamilAsianet News Tamil

ஓபிஎஸ் மீதான மற்றொரு ஊழல் வழக்கு !!  இன்று விசாரணைக்கு வருகிறது ….

corruption case against OPS today enquiry in HC
corruption case against OPS today enquiry in HC
Author
First Published Jul 23, 2018, 8:06 AM IST


துணை முதலமைச்சர் ஓபிஎஸ் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தாக அறப்போர் இயக்கம் சார்பில் தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பதாக தி.மு.கவை சேர்ந்த மாநிலங்களை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி லஞ்ச ஒழிப்பு காவல்துறையில் புகார் செய்தார். 6 மாதங்களாக அந்தமனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதையடுத்து அவர்சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி ‘6 மாதமாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? சி.பி.ஐ.விசாரணைக்கு உத்தரவிட்டால் என்ன? என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார். தற்போது இந்த வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளது.

இந்நிலையில் ஓபிஎஸ் மீது அறப்போர் இயக்கம் சார்பில் மேலும் ஒரு சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல்கண்காணிப்பு இயக்குநரகத்திடம்  அறப்போர் இயக்கம்,  புகார் அளிக்த்துள்ளது.

corruption case against OPS today enquiry in HC

அதில் ஓ.பன்னீர்செல்வம் வருமானத்துக்கு அதிகமாகச் சேர்த்துள்ள சொத்துவிவரங்கள் மற்றும்அதற்கான ஆவணங்களையும் அவர் வழங்கப்பட்டுள்ளது. . இது குறித்து அந்த இயக்கத்தின் தலைவர்  ஜெயராம் வெங்கடேசன் , 2006-லிருந்து 2017 வரை ஓபிஎஸ் குவித்துள்ள சொத்து விவரங்கள் அடங்கிய ஆதாரங்களை லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல்கண்காணிப்பு இயக்குநரகத்திடம் கொடுத்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

2006-ம் வருடம் நடைபெற்ற தேர்தலில் ரூ.20 லட்சமே தன்னுடைய சொத்துக் கணக்கு என கணக்குக் காட்டியவர் எப்படி 106ஏக்கர் நிலத்தை வாங்கினார். அந்த நிலம் அவரது மனைவி விஜயலட்சுமி மற்றும் மகன்கள் பெயரில்உள்ளது. அதற்கான ஆவணத்தை சமர்ப்பித்துள்ளோம்.

மேலும் நான்கு மரைன் டிரான்ஸ் போர்ட் நிறுவனங்களில் அவர்களுடைய மகன்கள் இயக்குநர்களாக இருந்து வருகின்றனர். 2008-லிருந்து தான் இந்த நிறுவனங்களில் பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

corruption case against OPS today enquiry in HC

இந்தப் பணம் முழுவதும் எப்படி இந்த நிறுவனத்துக்குள் வந்தது எனவும் கேள்வி எழுப்பினோம்.ஓபிஎஸ்சின்  பினாமியான சுப்புராஜ், பன்னீர் செல்வத்தின் ஏழுஏக்கர் நிலத்தை விற்று அந்தப் பணத்தை பஞ்சாயத்துக்கு ஏன் கொடுத்தார்? அவருடைய பின்னணி என்ன?

சொத்துக்கள் விவரங்கள் போன்றவற்றை இந்த விசாரணை வளையத்துக்குள் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறோம். ஊழல் செய்து ஓபிஎஸ் சேர்த்துள்ள சொத்துக்கள் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும் எனஅந்தப் புகாரில் தெரிவித்துள்ளோம் என வெங்கடேசன் தெரிவித்தார்.

கடந்த டிசம்பர் மாதமே கொடுத்த இந்த புகார்மனு மீது லஞ்ச ஒழிப்புத்துறைநடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இதையடுத்து அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு  இன்று விசாரணைக்கு வருகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios