ஊழல் கட்சி அ.தி.மு.க....? பி.ஜே.பி. தேசிய செயலாளரின் பொளேர் பதில்... அதிர்ச்சியில் எடப்பாடி டீம்..!

பி.ஜே.பி.யின் தேசிய செயலாளராக இருப்பவர் முரளிதர்ராவ். நேற்று கட்சியின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பொருட்டு கோயமுத்தூர் சிட்டிக்கு சென்றிருக்கிறார். அப்போது அ.தி.மு.க.வுடன் கூட்டணி குறித்து நிருபர்கள் கேட்டிருக்கின்றனர். அப்போது ‘ஊழல்’ குறித்த கேள்விக்கு ராவின் ரகளையான பதில், அ.தி.மு.க.வினரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Corrupt party AIADMK....Muralidhar rao

பி.ஜே.பி.யின் தேசிய செயலாளராக இருப்பவர் முரளிதர்ராவ். நேற்று கட்சியின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பொருட்டு கோயமுத்தூர் சிட்டிக்கு சென்றிருக்கிறார். அப்போது அ.தி.மு.க.வுடன் கூட்டணி குறித்து நிருபர்கள் கேட்டிருக்கின்றனர். அப்போது ‘ஊழல்’ குறித்த கேள்விக்கு ராவின் ரகளையான பதில், அ.தி.மு.க.வினரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

முரளிதர் ராவிடம் ‘உங்கள் கூட்டணியின் தலைமை கட்சியும், தமிழகத்தை ஆளும் கட்சியுமான அ.தி.மு.க. மீது நிறைய ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. இது குறித்த ஒரு புத்தகத்தையே எழுதி, ஒவ்வொரு அமைச்சர் மீதான ஊழல் புகார் பட்டியலுடன் கவர்னரிடமே கொடுத்தார் ராமதாஸ். அவரும் இப்போது உங்கள் கூட்டணியில் இணைந்திருக்கிறார். ராமதாஸின் மகனிடம் அந்த ஊழல் பட்டியல் பற்றி கேட்டபோது, ‘ஆம் தந்தோம் உண்மைதான். அதன் மீது விசாரணை நடக்கிறது.’ என்று கூறியிருக்கிறார். Corrupt party AIADMK....Muralidhar rao

சூழல் இப்படியிருக்க, ‘கை சுத்தமான ஆட்சி’ என்று மோடியின் ஆட்சியை கூறிக்கொண்டு ஓட்டு கேட்கும் நீங்கள் எப்படி இப்படிப்பட்ட ஒரு கட்சியின் தலைமையின் கீழ் கூட்டணி வைத்துள்ளீர்கள்? உங்கள் பார்வையில் அ.தி.மு.க. ஊழல் கட்சியா இல்லையா! இக்கட்சியுடன் கூட்டணி வைத்ததன் மூலம் உங்கள் கட்சியின் இமேஜ் சேதாரமாகியுள்ளது தானே?” என்று சரமாரியாக கேட்டுள்ளனர். இதற்கு பதில் தந்த ராவ் “பழைய விஷயங்களைப் பற்றி பேசவேண்டாம். ஃபியூச்சரைப் பற்றி பேசுவோம்.” என்று பதில் சொல்லியுள்ளார். Corrupt party AIADMK....Muralidhar rao

உடனே ‘அப்படியானால் அ.தி.மு.க. ஊழல் கட்சிதான், ஆனாலும் அதனுடன் கூட்டணி வைத்துவிட்டதால் அதைப் பற்றி பேசவேண்டாம்! என்று சொல்கிறீர்களா?’ என்று கேட்டதற்கு ‘நல்ல எதிர்காலத்தை நோக்கி நடைபோடுவதே இப்போது முக்கியம்.’ என்று பதில் தந்தார் ராவ். இவரது இந்த பதில்தான் ஆளுங்கட்சியை வெகுவாக அப்செட் ஆக்கியுள்ளது. இந்த பேட்டியை லைவ்வில் பார்த்த ஆளுங்கட்சியின் வி.வி.ஐ.பி.க்கள், எடப்பாடியாரிடம் “நமக்கு ஆதரவு தெரிவிச்சு முரளிதர் ராவ் பேசியிருக்க கூட வேண்டாம். ஆனால் நம்மை டேமேஜ் பண்ணாம இருந்திருக்கலாம்.  Corrupt party AIADMK....Muralidhar rao

பிரஸ் காரங்க கேட்டதுக்கு ‘அந்த புகார்கள் பற்றி எனக்கு தெரியாது! எனக்கு தேர்தல் வேலைகள் மட்டுமே தரப்பட்டிருக்குது! ஊழல் புகார் இருந்தால் அதை காண்பிங்க’ அப்படின்னெல்லாம் சொல்லியிருக்கலாம். அது நமக்கு ஒரு வகையில் ஆறுதலா இருந்திருக்கும். ஆனா இவரு என்னான்னா, ’அந்த ஊழல்களைப் பற்றி பேச வேண்டாம்!’...அப்படின்னு சொல்லாம சொல்ற மாதிரில்ல பேசியிருக்காரு. இப்படித்தான் நம்மளை கேவலப்படுத்துறதா? அன்னைக்கு அன்புமணியும் இப்படித்தான் ‘பட்டியல் தந்தது உண்மையே. கவர்னர் விசாரிக்கிறார்’ன்னு பேசுறார். Corrupt party AIADMK....Muralidhar rao

இவங்களெல்லாம் நம்மளை என்னான்னு நினைச்சுட்டு இருக்கிறாங்க?” என்று பொங்கியிருக்கின்றனர். எந்த வார்த்தையையும் சட்டென்று வெளிப்படுத்திடாத எடப்பாடியார், சைகையால் ‘அமைதி அமைதி. பார்த்துக்கலாம்.’ என்றிருக்கிறார். மக்களும் அமைதியாக பார்த்துட்டுதான் இருக்காங்க தல!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios