Asianet News TamilAsianet News Tamil

மாநகராட்சி, நகராட்சி தேர்தல் எப்போ தெரியுமா ? இந்த தேதியில் அறிவிக்க மாநில தேர்தல் அதிரடி முடிவு !!

மாநகராட்சி, நகராட்சி  மற்றும் பேரூராட்சிகளின் தேர்தல் தேதியை, வரும், 27 ஆம் தேதி மாநில தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து அரசியல் கட்சிகள் கூட்டணி, இட ஒதுக்கீடுகள் குறித்து சுறுசுறுப்பாக பேச்சு வார்த்தையில் இறங்கியுள்ளன.

corporation election date will announce on 27th jan
Author
Chennai, First Published Jan 14, 2020, 8:28 AM IST

தமிழகத்தில் பல ஆண்டுகளுக்குப் பின்னர்  கடந்த மாதம் 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. ஆனால் அப்போது புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களைத் தவிர மற்ற இடங்களில் மட்டுமே தேர்தல் நடைபெற்றது. அதுவும் தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் தேர்தல் நடத்தப்படவில்லை.

corporation election date will announce on 27th jan

27 மற்றும் 30 ஆம் தேதிகளில் நடைபெற்ற தேர்தல்களில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் சரிசமமாக  வெற்றி பெற்றன. இந்நிலையில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேருராட்சிகளுக்கு எப்போது தேர்தல் நடைபெறும் என்று மக்கள் மனதில் கேள்வி எழுந்துள்ளது. ஆளுங்கட்சியினர் இந்த தேர்தல்களை நடத்துவார்களா ? என்று எதிர்கட்சியினர் சந்தேகம் எழுப்பி இருந்தனர்.

corporation election date will announce on 27th jan

இதனிடையே நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான, நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சிகளுக்கான தேர்தலை நடத்த, ஆளும் கட்சி தயாராகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

corporation election date will announce on 27th jan

வரும், 27 ஆம்  தேதி, அதற்கான தேதியை, மாநில தேர்தல் ஆணையம் அறிவிக்க முடிவு செய்துள்ளது. இதையடுத்து, அ.தி.மு.க., தரப்பில், கூட்டணி கட்சிகளுடன், நகராட்சிகள், மாநகராட்சிகளில், வார்டுகளை பங்கீடு செய்வது குறித்து, ரகசிய பேச்சு நடைபெற்று வருவதாக தெரிகிறது,

Follow Us:
Download App:
  • android
  • ios