Asianet News TamilAsianet News Tamil

கார்ப்பரேட் அரசும் - பொம்மலாட்ட அரசும்.. அதிமுக- பாஜகவை அவமானப்படுத்திய திருமாவளவன்.

அதன்படி,  சட்டப்படியான சில சடங்குகளைச் செய்யும்வகையில், வரும் சனவரி-22 அன்று அதற்கான ' பொதுமக்கள் கருத்துக் கேட்பு' கூட்டத்தை நடத்தவுள்ளன. குறிப்பாக, தமிழக அரசு அதற்குரிய அறிவிப்பைச் செய்துள்ளது.  

Corporate government and puppet government .. Thirumavalavan who insulted AIADMK-BJP.
Author
Chennai, First Published Jan 18, 2021, 10:06 AM IST

காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கம் குறித்து கருத்துக்கேட்பு கூட்டமே நடத்தக் கூடாது எனவும், உடனே கார்ப்பரேட் அரசும் - பொம்மலாட்ட அரசும் அத்திட்டத்தை கைவிட வேண்டும் என விடுதலைச்சிறுத்தைகள் கட்சி கோரிக்கை வைத்துள்ளது. இது குறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்: எண்ணூர் அருகேயுள்ள காட்டுப்பள்ளி துறைமுகத்தின் விரிவாக்கமானது, அதானி குழுமத்தின் ஆக்டோபஸ் பேராதிக்கமாகும். எல்& டி நிறுவனத்துக்குச் சொந்தமான அத்துறைமுகத்தை தமதாக்கிக் கொண்ட அதானி குழுமம், தற்போது அதனை பல ஆயிரம் மடங்கு பரப்பளவில் விரிவாக்கம் செய்ய முனைகிறது. அதற்குச் சுற்றுச்சூழல் துறையின் அனுமதியைக் கோரியுள்ளது. 

Corporate government and puppet government .. Thirumavalavan who insulted AIADMK-BJP.

அதானி குழுமத்திற்குச் சேவை செய்வதே தனது தலையாயக் கடன் என,  துளியும் கூச்சமின்றி அதானிக்கு பணிவிடை ஆற்றிவரும் மோடியின் தலைமையிலான 'கார்ப்பரேட் அரசும்', தமிழகத்தில் எடப்பாடி பழநிச்சாமி தலைமையிலான மோடியின் 'பொம்மலாட்ட அரசும்' கூட்டுசேர்ந்து அதானிக்கு ஒத்துழைத்து வருகின்றன. அதன்படி,  சட்டப்படியான சில சடங்குகளைச் செய்யும்வகையில், வரும் சனவரி-22 அன்று அதற்கான ' பொதுமக்கள் கருத்துக் கேட்பு' கூட்டத்தை நடத்தவுள்ளன. குறிப்பாக, தமிழக அரசு அதற்குரிய அறிவிப்பைச் செய்துள்ளது. இந்நிலையில், அப்பகுதியைச் சார்ந்த மீனவர்கள், பழங்குடிகள் மற்றும் பிற பொதுமக்கள் மட்டுமின்றி, அனைத்துத்தரப்பு சனநாயக சக்திகளும் ஒருங்கிணைந்து அதற்குத் தீவிரமான எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. அதாவது, இந்க் கருத்துக் கேட்புக் கூட்டத்தையே நடத்தக் கூடாது என கடுமையாக எதிர்க்க வேண்டும். 

Corporate government and puppet government .. Thirumavalavan who insulted AIADMK-BJP.

இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், அப்பகுதிவாழ்  மீனவர்கள் மட்டுமின்றி, அனைத்துச் சமூக பொதுமக்களும் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். ஏறத்தாழ நான்காயிரம் ஏக்கருக்கும் மேலான அளவில் நிலப்பரப்பை ஆக்கிரமிக்கவுள்ளனர். அத்துடன்,  இரண்டாயிரம் ஏக்கர் பரப்பளவில் கடலையும் தூற்று விரிவுப்படுத்த உள்ளனர். இதனால், கடல்நீரானது  நிலப்பகுதியில் உட்புகும் பேரிடர் நிகழ வாய்ப்புள்ளது. இதன்மூலம் எதிர்காலத்தில் சென்னை பெருநகரத்துக்கும் பேராபத்து ஏற்படலாம். மீன்வளம் அழியும். கடல்வாழ்  பன்ம உயிரினங்களும் அழிந்தொழியும். பொதுமக்களின் புலப்பெயர்வு நடக்கும். அதாவது, எண்பதுக்கும் மேலான கிராமங்கள் அப்புறப்படுத்தப்படும். இதனால், இலட்சகணக்கான ஏழை எளிய மக்களின் இயல்பான வாழ்வு சீர்குலைந்து  சிதையும். சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்படும். அரசு நடத்தும் பிற துறைமுகங்களின் செயற்பாடுகள் படிப்படியாக முடங்கும்; காலப்போக்கில் அவை முற்றாக மூடப்படும்.

 Corporate government and puppet government .. Thirumavalavan who insulted AIADMK-BJP.

இத்தகைய பெரும்பாதிப்புகளை ஏற்படுத்தவுள்ள இத்திட்டத்துக்கு மையஅரசு அனுமதியளிப்பதை  பொதுமக்கள் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. குறிப்பாக,  சனநாயக சக்திகள் யாவரும்  ஒருங்கிணைந்து இதனை முறியடிக்க முன்வரவேண்டும். வேளாண்மை உள்ளிட்ட அனைத்துத் தளங்களிலும் அதானி குழுமத்தின் ஆக்டோபஸ் பேராதிக்கத்துக்கு முழுமூச்சாகத் தோள்கொடுத்துவரும் மோடியின் 'கார்ப்பரேட் அரசு' , தமிழகத்தில்  ஏற்கனவே இயங்கிவரும்  அரசு துறைமுகங்களை முறையாகவும் வெற்றிகரமாகவும் இயங்க ஆவனசெய்ய வேண்டுமெனவும் காட்டுப்பள்ளித் துறைமுக விரிவாக்கத் திட்டத்தை உடனே கைவிட வேண்டுமெனவும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். என அதில் கூறப்பட்டுள்ளது. 

 

Follow Us:
Download App:
  • android
  • ios