முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட எம்எல்ஏக்களுக்கு தற்போது கொரோனா பரிசோதனை தற்போது அவர்களது வீட்டிற்கே சென்று நடத்தப்பட்டுள்ளது. 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட எம்எல்ஏக்களுக்கு தற்போது கொரோனா பரிசோதனை தற்போது அவர்களது வீட்டிற்கே சென்று நடத்தப்பட்டுள்ளது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தமிழக சட்டப்பேரவை கூட்டம் கடந்த மார்ச் மாதம் 23-ம் தேதி நிறைவடைந்தது. அதற்கு பிறகு இம்மாதம் 14-ம் தேதி சட்டபேரவை மீண்டும் கூட்ட முடிவு செய்யப்பட்டது. கொரோனா தொற்று பரவல் காரணமாக கோட்டையில் உள்ள மைய மண்டபத்தில் சட்டபேரவையை கூட்டாமல் கலைவாணர் அரங்கத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், வரும் 14-ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தின் 3-ம் தளத்தில் உள்ள பல்வகை கூட்டரங்கத்தில் சட்டப்பேரவை கூட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தொடர் 14, 15 மற்றும் 16 ஆகிய 3 நாட்கள் நடைபெறுகிறது.

இந்நிலையில், சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்கக்கூடிய சட்டமன்ற உறுப்பினர்கள், காவலர்கள், பாதுகாவலர்கள், பத்திரிக்கையாளர்கள், பணியாளர்கள் உட்பட அனைவருக்கும் இந்த கொரோனா பரிசோதனை கட்டாயம் என்ற உத்தரவை சபாநாயகர் தனபால் பிறப்பித்துள்ளார். அவருடைய உத்தரவின் அடிப்படையில் 72 மணிநேரத்திற்கு முன்பாக இந்த கொரோனாபரிசோதனை செய்யப்படும் என தலைமைச்செயலாளர் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த சூழலில் இன்றைய தினம் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், எதிர்கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்குமே கொரோனா பரிசோதனை அவர்களது இல்லத்திற்கே சென்று சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனையை மேற்கொண்டுள்ளனர்.