கொரோனாவுக்கு ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் மருந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என்கிற செய்தி காட்டு தீபோல் பரவி வந்தது.. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக....இந்தியாவின் கோவாக்சின் மற்றும் ஜைகோவ்-டி உள்ளிட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்துகள் எதுவும் 2021க்கு முன்னர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தயாராக இருக்காது என்று அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் இன்று தெளிவுபடுத்தியுள்ளது. 

"ஆறு இந்திய நிறுவனங்கள் ஒரு கொரோனா தடுப்பூசியில் வேலை செய்கின்றன. கோவாக்சின் மற்றும் ஜைகோவ்-டி ஆகிய இரண்டு இந்திய தடுப்பூசிகளுடன், உலகளவிலான 140 தடுப்பூசிகளில் 11க்கும் மேற்பட்ட மருந்துகள் மனித சோதனைகளில் உள்ளன. இவற்றில் எதுவும் 2021க்கு முன்னர் வெகுஜன பயன்பாட்டிற்கு தயாராக இருக்க வாய்ப்பில்லை" என்று அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மனிதர்களுக்கு இன்னும் சோதனை நடத்தப்படாத நிலையில் ஆய்வுக்குரிய நேரத்தை அளிக்காமல் தேதியை அறிவித்தது குறித்து பல்வேறு மருத்துவர்களும் ஆராய்ச்சியாளர்களும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர்.இந்தியாவில் தயாராகும் முதல் தடுப்பு மருந்து இது. இதனால் மத்திய அரசு மேற்பார்வையில் மருத்துவ நிபுணர்களின் கண்காணிப்புடன் தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிஐபி தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றிய கோவாக்சினுக்கு மனித சோதனைகளை நடத்துவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 12 நிறுவனங்களுக்கு ஐ.சி.எம்.ஆர் இயக்குநர் ஜெனரல் "பால்ராம் பார்கவா" எழுதிய கடிதம், மனித சோதனைகளை விரைவுபடுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 15ஆம் தேதி தொடங்குவதற்கான காலக்கெடுவை அறிவித்தது குறித்து அமைச்சகத்தின் விளக்கம் வந்துள்ளது.முன்னதாக நேற்று ஐ.சி.எம்.ஆர், இந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் ஒரு கொரோனா தடுப்பூசியை அறிமுகப்படுத்தும் திட்டத்தை ஆதரித்து ஒரு அறிக்கையை வெளியிட்டது, இந்த கடிதம் தேவையற்ற சிவப்பு நாடாவை வெட்டுவதற்காக அனுப்பப்பட்டதாகவும், உலகளாவிய விதிமுறைகள் அனைத்தும் பின்பற்றப்படுவதாகவும் குறிப்பிட்டது.

"பாரத் பயோடெக்" இன்டர்நேஷனல் லிமிடெட் உடன் இணைந்து "கோவாக்சின்" தடுப்பூசி உருவாக்கப்பட்டு வருகிறது, இந்த மருந்து வெற்றி பெற்றால் இந்தியாவில் தயராகும் முதல் கொரோனா தடுப்பு மருந்து என்கிற பெருமையை பெறும் என்பதில் சந்தேகம் இல்லை.