காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேலை தொடர்ந்து பாஜக எம்.பி. கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

குஜராத் மாநிலத்தை சார்ந்த மாநிலங்களவை பாஜக எம்பி அபே பரத்வாஜ் கொரோனாவால் பாதிக்கப்படார். இதனையடுத்து, கடந்த அக்டோபர் 9ம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அதிதீவிர நுரையீரல் தொற்று இருந்ததால் உயிர்காக்கும் கருவிகள் மூலம் 50 நாட்கள் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று மாலை 4.35 மணிக்கு அபே பரத்வாஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. 

பாஜக எம்பி அபே பரத்வாஜ் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். குஜராத்தில் ஒரே வாரத்தில் இரு எம்.பி.க்கள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அம்மாநில மக்கள் இடைஅய மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.