Asianet News TamilAsianet News Tamil

வெளிநாட்டில் இருந்து வந்த மதப்பிரச்சாரகர்களால் பரவிய கொரோனா... மதுரையில் இறந்தவர் உடல் மசூதியில் புதைப்பு..!

மதுரையில் கொரோனாவால் இறந்தவரின் உடல் அவர் வசித்த கோமதிபுரம் பகுதியிலுள்ள மசூதியில் புதைக்கப்பட்டது.

Coronation spread by missionaries from abroad
Author
Tamil Nadu, First Published Mar 25, 2020, 1:46 PM IST

மதுரையில் கொரோனாவால் இறந்தவரின் உடல் அவர் வசித்த கோமதிபுரம் பகுதியிலுள்ள மசூதியில் புதைக்கப்பட்டது. தமிழகத்தில் முதன்முறையாக கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவருக்கு வெளிநாட்டில் இருந்து வந்த மதமாற்றம் செய்பவர்களால் அந்தத் தொற்று ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது.

மதுரை, அண்ணா நகரை சேர்ந்த 54 வயதில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. அது உறுதி செய்யப்பட்ட நிலையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு சிறுநீரக கோளாறு மற்றும் சர்க்கரை வியாதி இருப்பதால் அவர் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தார்.Coronation spread by missionaries from abroad

இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் இறந்து விட்டதாக கூறப்பட்டது. அதனை நேற்று நள்ளிரவு சுகாதாரத்துறை அமைச்சர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இறந்த அவரின் மனைவி மற்றும் உறவினர்கள் 10 பேர் மதுரை அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் முதல் பலியானவர் உடலை எரிக்க வேண்டும் என்று அவரது உறவினர்களிடம் சுகாதாரத்துறையினர் வலியுறுத்தினர். மத வழக்கப்படி புதைக்க வேண்டும் என்று கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் இறந்தவர் குடியிருந்த கோமதிபுரம் பகுதி நேற்று மாலை சீல் வைக்கப்பட்டது.Coronation spread by missionaries from abroad

அந்த பகுதியில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. திடீரென கோமதிபுரம் பகுதியில் அதிகாரிகள் நடமாட்டம் அதிகமானது. இதனால் மக்கள் பீதியடைந்தனர். கொரோனாவுக்கு இறந்தவர் வெளிநாடு செல்லாத நிலையில் அவருக்கு பாதிப்பு ஏற்பட்டது என்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை செய்தனர்.

 அதில், அவர் மதப்பிரச்சாரம் செய்பவர். வெளியூரிலிருந்து வரும் மதபோதகர்களுக்கு உதவியாக இருப்பார் என்று தெரியவந்தது. இதனையடுத்து இவர் யாருடன் மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் என விசாரணை நடந்தது. அதில் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 4 முஸ்லிம்கள் ஜனவரி 31ம் தேதி டெல்லி வந்தனர். அங்கு அவர்கள் மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். கடந்த 4ஆம் தேதி மேலும் 4 பேர் டெல்லி வந்துள்ளனர். என்று 8 பேரும் கடந்த 12ஆம் தேதி மதுரை ரயில் நிலையம் வந்தடைந்தனர். மதுரை அண்ணாநகர் பெரிய பள்ளிவாசல், கோமதிபுரம் பள்ளிவாசல், செல்லூரில் இரண்டு பள்ளிவாசல்கள் மற்றும் விலங்குகளில் பள்ளிவாசல்களில் தங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.Coronation spread by missionaries from abroad

 அவர்கள் அண்ணாநகர் பெரிய பள்ளிவாசலில் தங்கி இருந்தபோது தான் அண்ணா நகரைச் சேர்ந்த 54 வயதுடையவர் அவர்களுடன் தங்கியிருந்தார் என்பது தெரியவந்தது. இதற்கிடையில் வெளிநாட்டிலிருந்து வந்த 5 பேர் கடந்த 21ம் தேதி அலங்காநல்லூர் அருகே உள்ள மாலைப்பட்டி கிராமத்தில் உள்ள பள்ளிவாசலுக்கு சென்று தங்கினர். அவர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மதுரையில் கொரோனாவால் இறந்தவரின் உடல் அவர் வசித்த கோமதிபுரம் பகுதியிலுள்ள மசூதியில் புதைக்கப்பட்டது.  அவர் வசித்த தெருவுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.  அப்பகுதியில் நடமாடுவோர் மீது போலீஸ் தடியடி நடத்தி வருகின்றனர்

Follow Us:
Download App:
  • android
  • ios