மதுரை மத்திய சிறையில் இருக்கும் கைதிகளுக்கு கொரோனா தொற்று பரவியிருக்கிறது. இதை சிறைநிர்வாகம் கண்டுகொள்ளுவதில்லை.எங்களை எல்லாம் காப்பாற்றுங்கள் என்று கைதி ஒருவர் கதறும் ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மத்திய சிறையில் கைதிகள், காவலர்கள், அதிகாரிகளை கொரோனா பாதிப்பில் இருந்து பாதுகாக்க, டிஐஜி பழனி உத்தரவின் பேரில், பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இருப்பினும், மதுரை சிறை கைதி ஒருவர் பேசிய ஆடியோ ஒன்று  சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில்,  மதுரை மத்திய சிறைக்குள் ஒருவருக்கு கொரோனா தொற்று இருக்கிறது.சிறை நிர்வாகம் அது பற்றி கண்டுகொள்ள வில்லை. முன்எச்சரிக்கை நடவடிக்கைகளும் முறையாக எடுக்கப்படவில்லை என, குறிப் பிட்டுள்ள அந்த கைதி, இந்த ஆடியோவை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க உதவிடுமாறு, எதிர்முனையில் பேசிய நபரிடம் கூறுகிறார். 


சிறையில் நெருக்கடி இருப்பதால் கொரோனா வந்தவருக்கு சிகிச்சை இல்லை. கொரோனா வந்தவர் மேஸ்திரி என்றும் சொல்லுகிறார். இந்த விசயத்தை திமுக நடத்தும் ஒன்றினைவோம் வா எண்ணிற்கும் பகிருமாறு பேசுகிறார்.அதற்கடுத்தாற்போல் மாவட்ட கலெக்டர் முதல்வர்  ஃபேஸ்புக் ட்விட்டர் போடுங்க. ஆயுள் கைதிகளுக்கு தான் அதிகமாக பாதிப்பு இருக்கு. அமைச்சர் என அனைவருக்கும் பகிருங்கள் அப்படியாவது நடவடிக்கை எடுக்கட்டும். இங்குள்ளவர்களை காப்பாற்றுங்கள் என்று உயிர் பயத்தில் அந்த ஆடியோவை வெளியிட்டிருக்கிறார் அவர்.

சிறை அதிகாரி ஒருவர் கூறுகையில்," இது தவறான பதிவு. சிறை வளாகத்திற்குள் கொரோனா தடுக்க, முறையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தற்போது, மதுரை மாவட்டத்தில் பெரும்பாலும் வழக்கு தொடர்பாக யார் கைது செய்யப்பட்டாலும், அவர்களை வெளியூர் கிளை சிறைகளை அடைத்து, தொடர் கண்காணிப்பிற்கு பிறகே இங்கு அடைக்கப்படுகின்றனர்.தற்போது மதுரையில் கைதாகும் நபர்களை விருதுநகர் சிறையில் தனி அறையில் அடைத்து, கண்காணிக்கப்படுகிறது. 15 நாளுக்கு பின், அவருக்கு தொற்று அறிகுறி இல்லை என்பது உறுதி செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்படுகின்றனர்.இந்த நடைமுறை ஊரடங்கு காலத்தில் இருந்தே பின்பற்றப்படுகிறது என்றார்.