Asianet News Tamil

கொரோனா ஒழிப்பு.,மத்திய அரசு 15 ஆயிரம் கோடி.. கேரளா மாநில அரசு 20 ஆயிரம் கோடி., மக்களின் வாழ்வாதாரம் எங்கே??

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ரூ.15 ஆயிரம் கோடியை ஒதுக்கியுள்ளதாக பிரதமர் மோடி கூறியிருப்பது அதிர்ச்சியை ற்படுத்தியுள்ளது.இதனால் தான் பிரதமர் மோடி அவர்களே.., 'கேரளா முதல்வர் பிரனாய் விஜயனிடம் பாடம் கற்றுக்கொள்ளுங்கள் என்று அரசியல் கட்சி தலைவர்களும், இணைய தளவாசிகளும் கருத்துக்களை அள்ளி வீசி எறிகிறார்கள்.130 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் தேசிய பேரிடர் ஏற்பட்டிருக்கிறது.அதுக்கு 15 ஆயிரம் கோடி என்பது யானைக்கு சோளப்பொறி போடுவது போல் அமைந்திருக்கிறது என்கிற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
 

Coronation eradication, central government 15 thousand crores.
Author
India, First Published Mar 25, 2020, 8:30 AM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

T.Balamurukan
    கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ரூ.15 ஆயிரம் கோடியை ஒதுக்கியுள்ளதாக பிரதமர் மோடி கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதனால் தான் பிரதமர் மோடி அவர்களே.., 'கேரளா முதல்வர் பிரனாய் விஜயனிடம் பாடம் கற்றுக்கொள்ளுங்கள் என்று அரசியல் கட்சி தலைவர்களும், இணைய தளவாசிகளும் கருத்துக்களை அள்ளி வீசி எறிகிறார்கள்.130 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் தேசிய பேரிடர் ஏற்பட்டிருக்கிறது.அதுக்கு 15 ஆயிரம் கோடி என்பது யானைக்கு சோளப்பொறி போடுவது போல் அமைந்திருக்கிறது என்கிற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
 
சீனாவில் கொரோனா கடந்த ஜனவரி மாதம் பரவத் தொடங்கியது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட  நோயாளிகளை கையாள 9 நாளில் பிரத்தியேக மருத்துவமனை அமைக்கப்பட்டு அங்கு நோய் கட்டுப்படுத்தப்பட்டது. அதே நேரத்தில் கொரோனா உலகம் முழுக்க பரவலாம் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த எச்சரிக்கையை புறக்கணித்த பல நாடுகள் பிணத்தை அள்ளிக்கொண்டிருக்கிறது. அந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் ஒன்றாக இடம் பிடித்திருக்கின்றது.

 .கொரோனாவை எதிர்கொள்ள நமக்கு போதுமான காலம் இருந்தும், நம் ஊரில் அது பரவாது என்ற அசட்டு நம்பிக்கையில் இருந்துவிட்டோம். காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இந்தியாவிலும் கொரொனா பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை தேவை என்று எச்சரித்து இருந்தார். வேகமாக பரவி வருகிறது இனியாவது 21நாட்களுக்கு ஊரடங்கை அமல்படுத்துங்கள் என்று வலியுறுத்தியது பாமக. இப்படி அரசியல் கட்சித் தலைவர்கள் கதறிய போதும் 14 மணி நேர மக்கள் ஊரடங்குதான் அறிவிக்கப்பட்டது. அதற்குள்ளாகவே கொரோனா பரவுதல் தனி வேகம் எடுக்க தொடங்கியது.


 ஒவ்வொரு மாநிலமும் அதன் எல்லையை மூடி ஊரடங்கை அறிவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டன. எல்லோரும் அறிவிக்கட்டும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தது போல 24.03.2020 இரவு எட்டு மணிக்கு நாட்டு மக்களுக்காக உரையாற்றிய பிரதமர் மோடி அன்று நள்ளிரவு 12 மணி முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு என்று அறிவித்தார்.இந்த அறிவிப்பை அரசியல் கட்சி தலைவர்கள்,மருத்துவர்கள் எல்லாம் வரவேற்றார்கள். 

கொரோனாவை எதிர்கொள்ள பொருளாதார ரீதியான திட்டங்கள் பற்றி எதுவும் கூறாதது அதிர்ச்சியை அளித்துள்ளது. மேலும், கொரோனாவைக் கட்டுப்படுத்த ரூ.15 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது அதிர்ச்சியை அதிகரிக்கச் செய்துள்ளது.நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் தங்களுக்கு கொரோனாவை எதிர்கொள்ள தகுந்த பாதுகாப்பு ஆடை, முகக்கவசம் கூட இல்லை என்று பிரச்னை கிளப்பிய வருகிறார்கள். தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளை மாநில அரசுகள் தேடி வரும் நிலையில் ரூ.15 ஆயிரம் கோடி அறிவிப்பு போதுமானதாக இருக்காது என்று கூறப்படுகிறது. கேரள அரசு தன் மாநிலத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த, மக்களுக்கு பொருளாதார, உணவு பாதுகாப்பு வழங்க ரூ.20 ஆயிரம் கோடியை ஒதுக்கியது. ஒரு சிறிய மாநிலமே ரூ.20 ஆயிரம் கோடியை ஒதுக்கும் போது, மத்திய அரசு ரூ.15 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்குவது சரியா? என்று கேள்வி எழுந்துள்ளது.


நாடே மரண ஓலமிடும் நேரத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பான் கார்டு,ஆதார் இணைப்புக்கு கால அவகாசம் அளிக்கப்படும் என்கிறார், பிரதமர் வீட்டில் இருப்பது அவசியம் என்கிறார். வீட்டிற்குள் முடங்கி விட்டால் கொரொனாவை முழுமையாக ஒழித்து விட முடியுமா? பொருளாதாரம் சார்ந்த அறிவிப்புதான் என்ன? அன்றாடம் காட்சி மக்கள் தங்கள் குடும்பத்தை எப்படி காப்பாற்றுவார்கள்? வங்கிகளில் வீடு கட்ட, வாகனம், தொழில் எனக் கடன் வாங்கியவர்கள்,கடன் அட்டையில் கடன் வாங்கியவர்கள்,எல்.ஐ.சிக்கு பணம் கட்ட வேண்டியவர்கள், வீட்டு வாடகை என சாதாரண மக்களின் தேவை கொரோனாவே பரவாயில்லை என்கிற அளவிற்கு கழுத்தை நெறிக்கிறது.

இதுபோன்ற பிரச்சனைகளுக்கு என்ன தான் தீர்வு என்று மத்திய அரசு யோசித்து திட்டம் வைத்து அதை அறிவித்தால் மக்கள் யாரும் வெளியில் வராமல் நிம்மதியாக வீட்டிற்குள் மனநிம்மதியாக இருப்பார்கள்.மக்களுக்கான பிரச்சனையையும்,அவர்களின் பொருளாதாரப் பிரச்சனைகளையும் யோசித்து மத்திய அரசு மத்திய அரசு நல்ல அறிவிப்பினை வெளியிட வேண்டும் என்பதே நடுத்தர மக்களின் குரல் ஆங்காங்கே ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது.
நாட்டின் பொருளாதார பாதிப்பை விட உயிர் முக்கியம் என்ற பிரதமர் மோடி, உயிரைக் காக்க நாட்டைக் காக்க, மக்களின் பிரச்சனைகளையும் புரிந்து கொண்டு அதற்கேற்றார்போல் ,உணவு பொருள்கள் வழங்கவும் ஏற்பாடு செய்ய. மத்திய அரசு இன்னும் அதிக வேகத்துடன் செயல்பட வேண்டும் என்ற கோரிக்கை நாடு முழுவதும் எழுந்திருக்கிறது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios