Asianet News TamilAsianet News Tamil

கொரோனா: செப்டம்பர் 1ம் தேதி காவலர் தினமாக அறிவித்த முதல்வர்.! நெகிழ்ந்து நிற்கும் காவல்துறை.!

கொரோனா தடுப்பு பணியில் துணிச்சலோடு பணியாற்றி வரும் போலீசாரை கௌரவப்படுத்தும் வகையில் செப்டம்பர் மாதம் 1ம் தேதியைக் காவலர்கள் தினமாகக் கொண்டாடப்படும் என மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

CoronaThe Chief Minister declared September 1 as Police Day! Flexible police.!
Author
West Bengal, First Published Aug 17, 2020, 11:44 PM IST

கொரோனா தடுப்பு பணியில் துணிச்சலோடு பணியாற்றி வரும் போலீசாரை கௌரவப்படுத்தும் வகையில் செப்டம்பர் மாதம் 1ம் தேதியைக் காவலர்கள் தினமாகக் கொண்டாடப்படும் என மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

CoronaThe Chief Minister declared September 1 as Police Day! Flexible police.!
மம்தா பானர்ஜியின் இந்த அறிவிப்பு போலீசார் மட்டுமின்றி, பொது மக்கள் உள்படப் பல தரப்புகளில் வரவேற்பைப் பெற்றுள்ளது.கொரோனா பரவல் நாட்டில் கட்டுக்குள் அடங்காமல் சென்று கொண்டிருக்கிறது. தடுப்பு பணிகளை மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோருடன் போலீசாரும் இணைந்து பணி செய்து வருகின்றனர்.

இந்த பணிக் காரணமாக முன்னணி பணியாளர்கள் பலர் இந்த கொரோனா தொற்றுக்கு ஆளாவதும், அவர்களில் சில உயிரிழக்கும் சம்பவங்களும் ஏற்படுகின்றன. எது எப்படி நடந்தாலும் இந்த சூழலிலும், பெரும்பாலான போலீசார் சட்ட ஒழுங்கை காப்பது முதல் தங்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து பணிகளையும் சிறப்பாகச் செய்து மக்களைக் காப்பதையே முதற் பணியாகக் கொண்டுள்ளனர்.இதையடுத்து போலீசாருக்கு சிறப்புச் செய்ய வேண்டும் என முடிவெடுத்த மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, செப்டம்பர் 1ஆம் தேதியைக் காவர்கள் தினமாக அறிவித்துள்ளார்.

CoronaThe Chief Minister declared September 1 as Police Day! Flexible police.!

இந்த அறிவிப்பை வெளியிட்ட மம்தா பானர்ஜி, காவலர்கள் தினம் குறித்து பேசும் போது.., “கொரோனா அவசரக் காலத்தில், சட்டம்-ஒழுங்கு பாதிக்காமல், தங்கள் உயிரைப் பணயம் வைத்து போலீசார் வேலை பார்த்து வருகின்றனர். போலீசாக இருக்கும் பலர் கொரோனா தொற்றுக்குப் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்கள். போலீசாரின் இத்தகைய உயரிய சேவைக்கு இந்த அரசு மதிப்பளிக்கிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்..

Follow Us:
Download App:
  • android
  • ios