Asianet News TamilAsianet News Tamil

கொரோனா சிகிச்சை முகாமாகும் கோபாலபுரம் கருணாநிதி இல்லம்..? மு.க.ஸ்டாலினின் திட்டம் என்ன..?

கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் வாழ் நாளுக்குப் பிறகு மருத்துவமனையாக மாற்றப்படும் எனக் கூறி வருகின்றனர். ஆனால் தற்போதைக்கு மாற்ற முடியாது என திமுக நிர்வாகிகள் பதில் கொடுத்து வருகின்றனர். 

Coronal Treatment Camp Gopalapuram Karunanidhi Home ..? What is MK Stalin's plan?
Author
Tamil Nadu, First Published Mar 28, 2020, 4:10 PM IST

கொரோனா உத்தரதாண்டவமாடி வருகிறது. இந்நிலையில் கொரோனா திடீர் மருத்துவமனைகள் அமைக்க பலரும் தங்களது வீடு, அலுவலகங்களை தாமாக முன்வந்து பயன்படுத்திக் கொள்ள கொடுத்து வருகின்றனர். 

இந்நிலையில், திமுக தலைவராக இருந்த கருணாநிதி தான் வாழ்ந்த கோபாலபுரம் இல்லம் தனது காலத்துக்கு பிறகு தன்னுடைய மனைவி தயாளு அம்மாவுக்கும் சேரும். அவருடைய காலத்துக்குப்பின் அந்த இல்லம் மருத்துவமனையாக செயல்படும் என அறிவித்தார். தற்போது கருணாநிதி மறைந்து ஒரு ஆண்டுக்கு மேலாகிறது. கருணாநிதி கூறியது போல் கோபாலபுரம் இல்லத்தை மருத்துவமனையாக மாற்ற இது தான் சரியான தருணம் என பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.Coronal Treatment Camp Gopalapuram Karunanidhi Home ..? What is MK Stalin's plan?

கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் வாழ் நாளுக்குப் பிறகு மருத்துவமனையாக மாற்றப்படும் எனக் கூறி வருகின்றனர். ஆனால் தற்போதைக்கு மாற்ற முடியாது என திமுக நிர்வாகிகள் பதில் கொடுத்து வருகின்றனர். ஆனால், கருணாநிதியின் மகன், திமுக தலைவர் ஸ்டாலின் கோபாலபுரம் இல்லம் குறித்து வாய்திறக்கவில்லை.

Coronal Treatment Camp Gopalapuram Karunanidhi Home ..? What is MK Stalin's plan?

இதுகுறித்து திமுக வட்டாரத்தில் விசாரித்தபோது, ’கருணாநிதி வாழ்ந்த கோபாலபுரம் இல்லம் ருத்துவமனையாக மாற்றப்படும் என கருணாநிதி அறிவித்த போதே ஸ்டாலினுக்கு மணம் இல்லை. கருணாநிதி மறைவுக்கு பின் கோபாலபுரம் இல்லத்தை ராசியான இடமாகக் கருதும் ஸ்டாலின் சில முக்கிய அரசியல் சந்திப்புகளை கோபாலபுரம் இல்லத்தில் நடத்துகிறார். ஸ்டாலின் குடும்பத்தினருக்கும் கோபாலபுரம் இல்லத்தை விட்டு கொடுக்க மனமில்லை.

Coronal Treatment Camp Gopalapuram Karunanidhi Home ..? What is MK Stalin's plan?

இது குறித்து ஸ்டாலின் தனது குடும்ப உறுப்பினர்களிடம் ஆலோசனை செய்ததாகவும் எதிர்காலத்தில் வேறு இடத்தில் கருணாநிதி தயாளு அம்மாள் பெயரில் ஒரு மருத்துவமனை கட்டிடம் மக்கள் பயன்பாட்டுக்கு கொடுத்துவிட்டு கோபாலபுரம் வீட்டில் இருந்து தனது அரசியல் பணியை செய்து கொள்ளலாம் என திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஆகையால் கோபாலபுரம் இல்லத்தை கொரோனா சிறப்பு முகாம் அமைக்க வழங்கவில்லை எனக்கூறப்படுகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios