கொரோனா உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் வெளிநாட்டில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க மத்திய மாநில 
அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதற்கு பலரும் குரல் கொடுத்து வரும் நிலையில் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ தமிழர்களை மீட்க வேண்டும் என போராட்டம் நடத்தி வருகிறார். 

தமிழகம் முழுவதும் இருக்கும் மீனவர்கள் ஈரான் நாட்டில் சிக்கி தவித்து வருகிறார்கள் அவர்களை மீட்க அரசாங்கம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அவர்களை மீட்க வேண்டும் என்று குரல் கொடுத்து வருகிறார்.

இதற்கு ஆதரவு தெரிவித்து நடிகர் டி.ராஜேந்தர் தமிழர்களை தாங்கிப் பிடிக்க இந்த பதாகையை தாங்குகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

அவர் கையில் ஏந்தியுள்ள பதாகையில்,வெளிநாட்டில் பணிபுரிந்து கொரோனா நெருக்கடியால் தாயகம் வர விரும்பும் தமிழர்களை விரைந்து அரசு செலவில் மீட்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளில் வேலைக்கு சென்றிருக்கும் தமிழர்கள் இன்னும் பல நூறு பேர் உணவுஇன்றியும் சரியானபடி அடிப்படை வசதிகள் இன்றியும் அவதிப்பட்டு வருகின்றார்கள்.அவர்களை அரசு செலவில் அழைத்து வரவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார் டி.ராஜேந்தர்.