Asianet News TamilAsianet News Tamil

கண்கட்டி வித்தை காட்டி புதிய ரூபத்தில் தாக்கும் கொரோனா... அதிரடி விஸ்வரூபத்தால் அலறும் மருத்துவர்கள்..!

கொரோனா தோற்று உள்ள 80 சதவீத பேருக்கு இந்தியாவில் எந்தவித அறிகுறிகளும் தென்படவில்லை என இந்திய விஞ்ஞானிகள் கணித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

Corona without symptoms Indian medicine scientist in agony
Author
India, First Published Apr 21, 2020, 11:22 AM IST

கொரோனா தோற்று உள்ள 80 சதவீத பேருக்கு இந்தியாவில் எந்தவித அறிகுறிகளும் தென்படவில்லை என இந்திய விஞ்ஞானிகள் கணித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

கொரோனா தொற்று பரவலின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவிலும் உசம் தொட்டு வருகிறது. பொதுவாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்பு தும்மல், இருமல், சளி, காய்ச்சல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் தென்படும் என்று கூறப்பட்டது. ஆனால், தற்போது அந்த விதமான எந்த அறிகுறிகளும் தென்படாமல் தொற்று பரவுவதாக கண்டறியப்பட்டு இருக்கிறது.Corona without symptoms Indian medicine scientist in agony

 இதுதொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலைச் சேர்ந்த மூத்த விஞ்ஞானி கங்கா கேத்கர் கூறும்போது, இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதம் பேருக்கு நோய் தொற்றுக்கான எந்தவித அறிகுறிகளும் தென்படவில்லை. இதனால், பாதிக்கப்பட்டவர்களை கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. Corona without symptoms Indian medicine scientist in agony

அறிகுறி இல்லாதவர்களுக்கு தொற்று இருக்கிறதா? என்பதை கண்டறிவது சிரமமான ஒன்று. எனவே ஏற்கனவே தொற்று இருக்கும் நபர்களின் தொடர்பு நிலைகளை கொண்டு, அதன் தடங்களை அறிந்து அதன் வழியாகவே கண்டுபிடிக்க முடியும். சோதனை முறையில் வேறு எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியாது. பாதிப்பு எண்ணிக்கை இனி அதிகரிக்க வாய்ப்பு இருக்காது. மே 2-வது வாரத்தில் இதை சிறந்த முறையில் கணிக்க முடியும்’எனத் தெரிவித்துள்ளார். இது மருத்துவர்களுக்கு பெரும் சவாலாகவும், பொதுமக்களை அச்சுறுத்துவதாகவும் இருக்கிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios