Asianet News TamilAsianet News Tamil

200 நாட்களுக்கு கொரோனா தாக்கம் தீவிரமாக இருக்கும்..!! பிப்ரவரி மாதத்தில் வெளியான அதிர்ச்சி கட்டுரை..!!

இதுதொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் ஐ சி எம் ஆர்  பத்திரிக்கையில் அவர் கட்டுரை ஒன்று எழுதியுள்ளார் அதில்,   இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முடியும் ஆனால் அது  உறுதியான  நடவடிக்கையால் மட்டுமே சாத்தியம் , 

corona virus impact more 200 days in India ,
Author
Chennai, First Published Mar 25, 2020, 11:58 AM IST

கொரோனா வைரஸின் தாக்கம் 200 நாட்களுக்கு உச்சமாக இருக்கும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது இந்தியாவின் புற்றுநோயியல் நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி டாக்டர் தருண்  பட்நகர் இதைத் தெரிவித்துள்ளார் ,  அவர் வெளியிட்டுள்ள கட்டுரை நாட்டில் கொரோனா வைரஸின் தாக்கம் எந்த அளவிற்கு இருக்கும் என அரசாங்கம் அனுமதித்துள்ளது என தெரிவித்துள்ளார்.  இதுதொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் ஐ சி எம் ஆர்  பத்திரிக்கையில் அவர் கட்டுரை ஒன்று எழுதியுள்ளார் அதில்,   இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முடியும் ஆனால் அது  உறுதியான  நடவடிக்கையால் மட்டுமே சாத்தியம் , 

corona virus impact more 200 days in India ,

இந்த வைரஸ் குறித்து ஆய்வு தொடங்கிய  கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி முதல் இந்த வைரஸ் 200 நாட்களுக்கு உச்சகட்ட வீரியமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.   இச்சூழ்நிலையில் டெல்லியில் இந்த வைரஸ் அறிகுறிகள் எண்ணிக்கை 1.5 மில்லியனாக இருக்கும் ,   மும்பை ,  கொல்கத்தா மற்றும் பெங்களூரில் தல 5 லட்சமாக இருக்கும் எனவும் கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி வெளியான ஆய்வு கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.  இந்த கட்டுரையின்  ஆசிரியரும்  சென்னையில் உள்ள ஐசிஎம்ஆர் மாதிரி தேசிய தொற்றுநோய்கள் நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானியுமான டாக்டர் தரும் பட்நகர் இந்தியாவில் தற்போது இறப்பு விகிதம் 2% என தெரிவித்துள்ளார் ,  வீட்டில் தனிமைப்படுத்தி வைப்பதன் மூலம்  50% நோய்த்தொற்றை கட்டுப்படுத்த முடியும் என தெரிவித்துள்ளார் .  அதேபோல் நோய்த்தொற்றுகள் பரவுதலை தனிமைப்படுத்துதலின் மூலம்  நோய் பரவுதலை 80 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை குறைக்க முடியும் என தெரிவித்துள்ளார் . 

corona virus impact more 200 days in India ,

தாங்கள் எடுத்த கணக்கீட்டின்படி நோய் தொற்றிற்கு இயற்கையான வரலாறு மற்றும் நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு திரும்புதல் மூலமாக ஏற்பட்ட தொற்று நோய்கள் தாக்கங்களை கொண்டு கணக்கிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார் .  ஆய்வு தொடங்கிய பிப்ரவரி தொடக்கத்தில் சீனாவில் நோய் தாக்கம் அதிகமாக இருந்தது அங்கு தாக்கம் அதிகமாக இருக்கும் என்று கணித்தோம் ஆனால் அது குறைந்துள்ளது என்றார்.    விமான நிலையங்களில் நடத்தப்பட்ட வைரஸ் பரிசோதனை 50 சதவீதம் பேருக்கு நல்ல பலனை கொடுத்துள்ளது . இந்நிலையில் அறிகுறி உள்ளவர்கள் வீட்டில் தனிமைப் படுத்தினால்  பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை பாதியாக குறையும் என்றார். கடுமையான பாதிப்புக்குச் செல்லக்கூடியவர்கள் 4 முதல் 5 சதவீதமாக இருப்பர் என அந்த கட்டுரையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.  
 

Follow Us:
Download App:
  • android
  • ios