இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதால்தான் மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக பலரும் கூறினர்.
நடிகர் விவேக் கடந்த ஏப்ரல் 17ம் தேதி மாரடைப்பால் திடீரென மரமஐந்தார். அவர் இறப்பதற்கு ஒரு நாளுக்கு முன்புதான் கொரோனா விழிப்புணர்வு செய்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதால்தான் மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக பலரும் கூறினர். 
இது தொடர்பாக, விழுப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன் என்பவர் தேசிய மனித உரிமை ஆணையத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், ‘நடிகர் விவேக் தடுப்பூசி போட்டுக் கொண்டதால்தான் இறந்தார். அவருக்கு முன்னதாக முறையான மருத்துவ பரிசோதனை செய்யப்படாததும் அதற்கு முக்கிய காரணமாகும். இது தொடர்பாக விரிவாக விசாரிக்க வேண்டும்’என கூறியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த தேசிய மனித உரிமை ஆணையம் தற்போது அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில், ’கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு முன்பாக, அனைவருக்கும் உரிய மருத்துவ பரிசோதனைகளை செய்ய வேண்டும். எதனால் உயிரிழப்பு ஏற்படுகிறது என்பது அப்போது தான் தெளிவாக தெரிய வரும். இதற்கு நடிகர் விவேக் மரணம் ஒரு முக்கிய உதாரணம். மனுதாரரின் இந்த கோரிக்கை குறித்து 8 வாரத்துக்குள் மத்திய சுகாதார அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’என உத்தரவிட்டு ஆணையம், வழக்கையும் முடித்து வைத்தது.
