தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு  கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் குடும்பத்துடன் அனுமதிக்கப்ட்டுள்ளார்கள்.


தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,709 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 65,075 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரையில், 37,12,657 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.தமிழகத்தில் இன்று மட்டும் 5,709 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த பாதித்தவர்களின் எண்ணிக்கை 3,49,654 பேராக அதிகரித்துள்ளது.இன்று மட்டும் 5,850 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். அதன்மூலம் கொரோனா குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,89,787 ஆக அதிகரித்துள்ளது.இன்று மட்டும் 121 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,007 ஆக அதிகரித்துள்ளது.இன்று மட்டும் சென்னையில் 1,182 பேருக்கும், செங்கல்பட்டில் 344 பேருக்கும், கோயம்புத்தூரில் 392 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.


தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே  செல்கிறது. கொரோனா தொற்றால் மக்களும் எம்எல்ஏக்கள் எம்பிக்கள் அமைச்சர்களை தொடர்ந்து சினிமா பிரபலங்களும் சினிமா பாடகர் எஸ்பிபியும் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார்.இந்நிலையில், தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அமைச்சரை தொடர்ந்து அவரது மனைவி, மகள் ஆகியோருக்கும் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து சென்னை அப்பலோ மருத்துவமனையில் 3 பேரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.