கொரோனா வைரஸ்க்கு இன்னும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் பொது முடக்கம் படிப்படியாக நீக்கப்பட்டிருக்கிறது. பொதுமக்கள் அரசு சொல்லும் எதையும் கேட்பதாக தெரியவில்லை. முககவசம் அணிவதும் இல்லை. கூட்டநெரிசல்களில் மக்கள் கூட்டம் தீபாவளி போன்ற நேரத்தில் அலைமோதியது. இந்த நிலையில் டெல்லியில் ஒரே நாளில் மட்டும் சுமார் 6ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கே 3வது அலைவீசுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 17 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

டெல்லியில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பாதிப்பு உயர்ந்து வருகிறது. டெல்லியில் கொரோனா பரவலின் 3-வது அலை வீசுவதாக கூறப்படுகிறது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை  கெஜ்ரிவால் அரசு முடுக்கி விட்டுள்ளது.


டெல்லி சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின் படி, டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 6,608- பேருக்கு கொரோனா  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.தொற்று பாதிப்பில் இருந்து 8,775- பேர் குணம் அடைந்த நிலையில் 40,936 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில்  கொரோனா வைரஸ் பாதிப்பால் 118 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை   8,159 ஆக உள்ளது.