Asianet News TamilAsianet News Tamil

ஆண்டிப்பட்டியில் கொரோனா கோயில்... முன்றாவது அலையை தடுக்க திட்டம்..!

கொரோனோ வைரஸின் மூன்றாவது அலையை தடுக்க ஆண்டிபட்டி அருகே கொரோனோ கோயிலை உருவாக்கும் முயற்சியில் 90 வயது முதியவர் ஒருவர் ஈடுபட்டுள்ளார். 

Corona temple in Andipatti ... plan to stop the third wave ..!
Author
Tamil Nadu, First Published Jul 1, 2021, 12:44 PM IST

கொரோனோ வைரஸின் மூன்றாவது அலையை தடுக்க ஆண்டிபட்டி அருகே கொரோனோ கோயிலை உருவாக்கும் முயற்சியில் 90 வயது முதியவர் ஒருவர் ஈடுபட்டுள்ளார். 
 
தமிழகத்தில் கொரோனா 2வது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதைத் தடுப்பதற்கான முயற்சியில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அத்துடன் மாநிலம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த வேண்டி, கோவை இருகூர் பகுதியில் கடந்த ஆண்டு, கொரோனா தேவி சிலையை நிறுவி வழிபாடுகளை மேற்கொண்ட சம்பவம், மக்களின் கவனத்தை பெற்றது.Corona temple in Andipatti ... plan to stop the third wave ..!

இந்நிலையில், தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள அம்மச்சியாபுரம் கிராமத்தை சேர்ந்த 90 வயது ஓய்வு பெற்ற மின்வாரிய பொறியாளர் ராஜரத்தினம் என்பவர், தனது விவசாய தோட்டத்தில் கொரோனா கோயில் கட்டுவதற்கான பணிகளை தொடங்கியுள்ளார். முதல்கட்டமாக கோயிலுக்கான பெயர் பலகையை வைத்துள்ள அவர், விரைவில் கோயில் கட்டும்பணியை தொடங்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios