தமிழக  ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கொரோனா அறிகுறி இருந்ததையடுத்து அவர் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், தீயணைப்புப் படை வீரர்கள், சி.ஆர்.பி.எஃப் ஊழியர்கள் உள்ளிட்ட 84 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன்பின்னர், ராஜ்பவன் ஊழியர்கள் மேலும் 38 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் ஆளுநருக்கு நெருக்கமாக பணிபுரிந்த ஊழியர்கள். பன்வாரிலால் புரோஹித் அதில், ஒருவர் ஆளுநர் பன்வாரிலாலின் உதவியாளர்.

அதில், ஒருவர் ஆளுநர் பன்வாரிலாலின் உதவியாளர். இதையடுத்து, கடந்த 29-ம் தேதி 7 நாட்களுக்கு ஆளுநர், தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். தனிமைப்படுத்திக் கொண்டு 3 நாள்கள் ஆன நிலையில், அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.