இந்நிலையில், தமிழ்நாட்டில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக அனைத்து மையங்களுக்கும் போதிய தடுப்பூசி மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 

தமிழ்நாட்டில் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி போடும் பணி இன்று துவங்கியது. சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் காலை முதலே பலரும் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். ஜனவரி மாதம் 16ம் தேதி முதன் முதலில் இந்தியாவில் தடுப்பூசி போடப்பட்டது. முதலில் சுகாதார ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள், முன்களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

அதன் பின் மார்ச் 1ம் தேதியில் இருந்து 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட பல்வகை நோய் தாக்குதலுக்கு ஆளானவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இதுவரை நாடு முழுவதும் 7 கோடி பேருக்கு மேல் தடுப்பூசி போட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி நடைப்பெற்று வருகிறது. இதற்காக தடுப்பூசி மையங்கள் நாடு முழுவதும் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. அதிகளவில் தனியார் மருத்துவமனைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

மேலும் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் யார் வேண்டுமானாலும் அந்தந்த மையங்களுக்கு நேரடியாக சென்று பதிவு செய்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக அனைத்து மையங்களுக்கும் போதிய தடுப்பூசி மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும், நாளை கூடுதலாக 12 லட்சம் டோஸ் கோவிஷீல்டு மருந்துகள் சென்னைக்கு வர உள்ளது, அவற்றையும் அந்தந்த முகாம்களுக்கு பிரித்து அனுப்பும் நடவடிக்கையில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.