Asianet News TamilAsianet News Tamil

கொடூர முகம் காட்டும் கொரோனா. பீதியில் உறைந்த மக்கள்.. ஒரே நாளில் 36 விமானங்கள் ரத்து..

சென்னை விமானநிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்ததால் இன்று ஒரே நாளில் 36 உள்நாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது. கொரோனா வைரஸ்  இரண்டாவது அலை பரவல் காரணமாக சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

Corona showing a cruel face. People froze in panic .. 36 flights canceled in one day ..
Author
Chennai, First Published Apr 15, 2021, 4:50 PM IST

சென்னை விமானநிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்ததால் இன்று ஒரே நாளில் 36 உள்நாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது. 

கொரோனா வைரஸ்  இரண்டாவது அலை பரவல் காரணமாக சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இதனால் இன்று சென்னை உள்நாட்டு விமானநிலையத்திலிருந்து புறப்படும் 18  விமானங்களும், அதைப்போல் சென்னைக்கு வரும் 18  உள்நாட்டு விமானங்களும் மொத்தம் 36  விமானங்கள் இன்று ஒரே நாளில் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

Corona showing a cruel face. People froze in panic .. 36 flights canceled in one day ..

குறிப்பாக சென்னை மற்றும் சென்னை புறநகா் பகுதிகளான செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூா் மாவட்டங்களில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகின்றன. இதனால் சென்னை விமானநிலையம் தொடா்ந்து  பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. போதிய பயணிகள் இல்லாமல் நேற்றும், நேற்று முன்தினமும் ஒவ்வொரு நாளும் 18 உள்நாட்டு விமானங்கள் ரத்தாகின. 

Corona showing a cruel face. People froze in panic .. 36 flights canceled in one day ..

இனால் இன்று இரு மடங்காக அதிகரித்துள்ளது.சென்னை உள்நாட்டு விமானநிலையத்திலிருந்து புறப்படும் விமானங்களான பெங்களூா் விமானங்கள் 4, டில்லி விமானங்கள் 3,மும்பை விமானங்கள் 3,இந்தூா் விமானங்கள்  2,ஹைதராபாத் 1,நாக்பூா் 1,புனே 1,சூரத் 1,மங்களூா் 1,அந்தமான் 1 ஆகிய 18 விமானங்களும், அதைப்போல் சென்னைக்கு திரும்பி வரும் 18 விமானங்களும் மொத்தம் 36 விமானங்கள் இன்று ஒரே நாளில் ரத்து ஆகியுள்ளன.இவைகள் தவிர இன்று சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் வருகை விமானங்கள் 112,புறப்பாடு விமானங்கள் 109 இயக்கப்படுகின்றன.அவைகளிலும் மிகவும் குறைந்த அளவு பயணிகளே பயணிக்கின்றனா்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios