Asianet News TamilAsianet News Tamil

சென்னையை தொடர்ந்து மதுரை மக்களுக்கு கொரோனா நிவாரணம்.!! முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு.!!

சென்னையை தொடர்ந்து மதுரையிலும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கானது வரும் 30ம் தேதி வரைக்கும் அமலில் இருக்கும். அதே நேரத்தில் சென்னைக்கு வழங்கிய 1000ம் ரூபாய் மதுரைக்கும் வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து அந்த கோரிக்கைகளை சமூக வளைத்தளங்கள் மூலமாக சமூக ஆர்வலர்கள் கொண்டு சேர்த்தனர்.

Corona Relief to Madurai People Chief Minister Edappadi Palanisamy announces.
Author
Tamilnadu, First Published Jun 24, 2020, 7:28 PM IST

 சென்னையை தொடர்ந்து மதுரையிலும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கானது வரும் 30ம் தேதி வரைக்கும் அமலில் இருக்கும். அதே நேரத்தில் சென்னைக்கு வழங்கிய 1000ம் ரூபாய் மதுரைக்கும் வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து அந்த கோரிக்கைகளை சமூக வளைத்தளங்கள் மூலமாக சமூக ஆர்வலர்கள் கொண்டு சேர்த்தனர்.

Corona Relief to Madurai People Chief Minister Edappadi Palanisamy announces.
இந்தநிலையில் இன்று தமிழக முதல்வர் எட்ப்பாடி முதல்வர் பழனிச்சாமி மதுரை மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு அதாவது அரிசி அட்டை வைத்திருப்பவர்களுக்கு ரூ 1000 வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்.

முழு பொதுமுடக்கத்தால் ஆட்டோ ஓட்டுனர் கட்டிட வேலைக்கு செல்வோர் வீட்டு வேலைக்கு செல்வோர் என பலதரப்பட்ட மக்கள் வேலைக்கு  செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பதிவு செய்துள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் நிவாரணம் தொகை வழங்கப்படும் என்றார். மதுரை மாநகராட்சி பகுதிகள், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு ஊரகப்பகுதிகள், திருப்பரங்குன்றம் ஆகிய பகுதிகளில் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.இப்பகுதியில் உள்ளவர்களுக்கு நிவாரணம் நிதி வழங்கப்படும் எனத் தெரிகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios