Asianet News TamilAsianet News Tamil

கொரோனா தடுப்புக்கு ஆன செலவு எவ்வளவு தெரியுமா? சட்டப்பேரவையில் அறிவித்த ஓபிஎஸ்.. வாய் பிளக்கும் தமிழக மக்கள்.!

மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களுக்காக ரூ.830.60 கோடியும், மருத்துவக் கட்டுமானப் பணிக்கு ரூ.147.10 கோடியும் செலவிடப்பட்டுள்ளது.
நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணத் தொகை மற்றும் இலவச பொருள்கள் வழங்க ரூ.4,896.05 கோடி செலவிடப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சைக்காக தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு ரூ.262.25 கோடி இதுவரை செலவு செய்யப்பட்டுள்ளது.

corona prevention and treatment cost... deputy cm panneerselvam
Author
Chennai, First Published Sep 15, 2020, 5:33 PM IST

தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவத் தொடங்கியது முதல், தொற்றுப் பரவல் தடுப்பு, சிகிச்சை மற்றும் நிவாரணப் பணிகளுக்கு என ரூ.7,167.97 கோடி செலவிடப்பட்டிருப்பதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் தமிழக சட்டப்பேரவைக் கூட்ட த்தொடரில், தமிழகத்தில் இதுவரை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு செலவிடப்பட்டத் தொகை குறித்து தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் விளக்கம் அளித்தார். அதில், தமிழகத்தில் இதுவரை கொரோனா தடுப்பு , சிகிச்சை, நிவாரணப் பணிகளுக்கு என ஒட்டுமொத்தமாக ரூ. 7,167.97 கோடி செலவிடப்பட்டுள்ளது.

corona prevention and treatment cost... deputy cm panneerselvam

அதில் , மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களுக்காக ரூ.830.60 கோடியும், மருத்துவக் கட்டுமானப் பணிக்கு ரூ.147.10 கோடியும் செலவிடப்பட்டுள்ளது. நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணத் தொகை மற்றும் இலவச பொருள்கள் வழங்க ரூ.4,896.05 கோடி செலவிடப்பட்டுள்ளது.கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சைக்காக தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு ரூ.262.25 கோடி இதுவரை செலவு செய்யப்பட்டுள்ளது.

corona prevention and treatment cost... deputy cm panneerselvam

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அமர்த்தப்பட்ட கூடுதல் பணியாளர்களின் ஊதியம் மற்றும் உணவுக்கு ரூ.243.50 கோடி, வெளிமாநில தொழிலாளர்களுக்கு ரூ .143 .63 கோடி செலவிடப்பட்டிருப்பதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios