கொரோனா தொற்றிலிருந்து சென்னையைக் காப்பாற்ற பல திட்டங்களை வைத்திருக்கிறோம்... ஒவ்வொன்றாக அமல்படுத்தி தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவருவோம் என்று முதல்வர் பழனிசாமியும், சுகாதார அமைச்சரும், அதிகாரிகளும் வீர வசனம் பேசி பேட்டிகள் கொடுக்கிறார்களே.! தவிர அதைச் செயலில் காட்டுவதாகத் தெரியவில்லை.

இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியதாவது...  "சென்னை மாநகரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதை எதிர்கொண்டு சமாளித்து உரிய சிகிச்சை வசதிகளை அளிக்க வேண்டிய தமிழக அரசு, முதல்வர் பழனிசாமியின் நிர்வாகத் திறமையின்மையால் திணறிவருவதும் அதன் காரணமாக நோயாளிகள் அங்கும் இங்கும் அலைக்கழிக்கப்படுவதும் வேதனைக்குரியது மட்டுமல்ல கண்டனத்திற்கும் உரியதாகும்.

கொரோனா தொற்றிலிருந்து சென்னையைக் காப்பாற்ற பல திட்டங்களை வைத்திருக்கிறோம்... ஒவ்வொன்றாக அமல்படுத்தி தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவருவோம் என்று முதல்வர் பழனிசாமியும், சுகாதார அமைச்சரும், அதிகாரிகளும் வீர வசனம் பேசி பேட்டிகள் கொடுக்கிறார்களே.! தவிர அதைச் செயலில் காட்டுவதாகத் தெரியவில்லை.

நேற்று வரை சென்னை மாநகரப் பகுதிகளில் மட்டும் 14 ஆயிரத்து 802 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அதில் 129 பேர் மரணமடைந்திருக்கிறார்கள். தமிழகத்தில் இந்நோயால் பாதிக்கப்படுபவர்களில் 66 சதவிகிதம் பேர் சென்னைவாசிகள். மரணமடைபவர்களில் நான்கில் ஒருவர் சென்னைவாசி.நோயைக் கட்டுக்குள் வைக்க தமிழக அரசு எடுத்த எந்த நடவடிக்கையும் பலனளிக்கவில்லை என்பதையே இந்த அபாயகரமான புள்ளிவிவரங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் இறப்பு விகிதம் குறைவு என்று நாள்தோறும் சொல்லி பெருமைப்பட்டுக்கொள்கிறார் சுகாதாரத்துறை அமைச்சர். தமிழகத்தில் இதுவரை 173 உயிர்களை இந்நோய்க்காக பலி கொடுத்துவிட்டு இப்படி பெருமைப்பட்டுக் கொள்வது மனிதத்தன்மையுள்ள செயல்தானா? தமிழகத்தில் ஒரு உயிரைக்கூட கொரோனாவுக்காக பலியாக விடமாட்டோம் என்று வசனம் பேசியதெல்லாம் என்னவாயிற்று?