சமூக பரவலாக மாறி விட்டதா என்கிற சந்தேகத்தை கிளப்பி வருகிறது. மூன்றாம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் நான்காவது முறையாக ஊரடங்கு நீடிக்கப்படுமா என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. ஆனால்  படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் மூலம் பல்வேறு தொழில்கள், விபாயார நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் முன்னதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி அரசாங்கத்திற்கு ஆண்டுக்கு ரூ.3 ஆயிரம் கோடி வருமனம் வந்தது. கொரோனாவால் 300 கோடி ரூபாய் மட்டுமே வருமானம் கிடைத்துள்ளது. ஆகையால் வேறு வழி இல்லை. மக்கள் கொரோனாவுடன் வாழப்பழகிக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்து இருந்தார்.

இதேபோல் மத்திய சுகாதார துறையலலாளரும்  மக்கள் கொரோனாவுடன் வாழப்பழகிக் கொள்ள வேண்டும் எனக் கூஇருந்தார். இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் நாளிதழ் ஒன்றில் வெளியான கார்ட்டூன் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.  

அந்த கார்ட்டூனில் பேப்பர் படித்துக் கொண்டிருக்கும் கணவர் கொரோனாவுடன் வாழக் ககற்றுக்கொள்ள வேண்டும் என்கிற செய்தியை படித்துக் கொண்டு இருக்கிறார். அப்போது கொரோனா பெட்டி படுக்கையுடன் வீட்டிற்கு வருகிறது. அதனை பார்த்த கணவர் விருந்தாளியை வரவேற்பதை போல தனது மனைவியிடம், ஜானகி வீட்டுக்கு யார் வந்திருக்காங்க பாரு எனக் கேட்கிறார். இந்த கார்ட்டூன் இணையத்தில் வேகமாக பகிறப்பட்டு வருகிறது.