Asianet News TamilAsianet News Tamil

புதுச்சேரியில் கொரோனா தொற்று வேகம் குறைந்தது.. மாநில மக்கள் நிம்மதி பெருமூச்சு..

மேலும் புதுச்சேரியில் 15 நபர்களும், காரைக்காலில் 2 நபர்கள், ஏனாமில் ஒருவர் என மொத்தம் 18 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1601 ஆக உயர்ந்துள்ளது. 

Corona infection rate slows in Pondicherry .. State people of relief ..
Author
Chennai, First Published Jun 4, 2021, 12:42 PM IST

புதுச்சேரியில் இதுவரை 107826 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், கடந்த 24 மணி நேரத்தில் 712 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என்றும், நேற்று மட்டும் 18 நபர்கள் உயிரிழந்துள்ளதாகவும் அம்மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

கொரோனா தமிழகத்தில் வேகமெடுத்த அதே நேரத்தில் புதுவையிலும் கொரோனா தீவிரமாக தாக்கத் தொடங்கியது, கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அம்மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாக பரவியதையடுத்து அம்மாநில அரசு எடுத்த ஊரடங்கு நடவடிக்கையின் காரணமாக வைரஸ் தொற்று மெல்ல குறைய தொடங்கியுள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டாலும் சில வாரங்களால பாதிப்பு எண்ணிக்கை 2000க்கும் அதிமகானவே பதிவாகி வந்தது. 

Corona infection rate slows in Pondicherry .. State people of relief ..

மேலும் இறப்பவர்களின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 30 என பதிவாகி வந்தது, இது அம்மா மாநில மக்களை மிகுந்த கவலையடைய வைத்தது. ஆனால் தற்போது அங்கு நோய்த்தொற்றின் வேகம் படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. நோய் பாதிப்பு ஆயிரத்துக்கு கீழ் குறைந்து காணப்படுகிறது, உயிரிழப்பின் எண்ணிக்கையும் 20க்கு கீழ் பதிவாகி வருகிறது. இது அம்மாநில மக்களுக்கு மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில்  புதுச்சேரியில் 530 நபர்களுக்கும்,  காரைக்காலில் 121 நபர்களுக்கும்,  மாஹேவில் 25 நபர்களுக்கும் , ஏனாமில் 36 நபர்கள்  என மொத்தம் 712 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Corona infection rate slows in Pondicherry .. State people of relief ..

மேலும் புதுச்சேரியில் 15 நபர்களும், காரைக்காலில் 2 நபர்கள், ஏனாமில் ஒருவர் என மொத்தம் 18 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1601 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 9494 நபர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 96731 நபர்கள் குணமடைந்துள்ளனர். மாநிலத்தின் மொத்த பாதிப்பு 107826 ஆக உள்ளது. என சுகாதார துறை தகவல் தெரிவித்துள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios