ராம் ஜென்ம தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை தலைவர் மஹந்த் ந்ருத்யா கோபால் தாஸுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. 
 
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளை அமைக்கப்பட்டது. ராம் ஜென்ம தீர்த்த க்ஷேத்ரா என்ற அறக்கட்டளை அமைப்பின் மேற்பார்வையில் கோயில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி, கடந்த 5-ம் தேதி ராமர் கோயிலுக்கான பூமி பூஜை பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த பூஜையில் பிரதமர் மோடி கலந்துகொண்டு கோயிலுக்கான அடிக்கலை நாட்டினார். இந்நிலையில், இந்த விழாவில் கலந்து கொண்ட ராம் ஜென்ம தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை தலைவர் மஹந்த் ந்ருத்யா கோபால் தாஸ்-க்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

 

மஹந்திற்கு காய்ச்சல் இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனே மருத்துவர்கள் குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் விசாரித்து மருந்துகளை வழங்கினர். அது சாதாரண காய்ச்சல் தான், அவருக்கு லேசான மூச்சுத் திணறல் உள்ளது, அவருடைய ஆக்ஸிஜன் அளவை நாங்கள் சோதித்துள்ளனர்.  தீவிரமாக எதுவும் இல்லை . பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. அவருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் பாசிட்டிவ் என்ற முடிவு வந்துள்ளது என மருத்துவர்கள் கூறி உள்ளனர். 

ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி, உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், உ.பி ஆளுநர் ஆனந்திபென் படேல், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டதால் கலக்கம் ஏற்பட்டுள்ளது.