கொரோனா தொற்று உலகம் முழுவதும் புயலாய் புரட்டியெடுத்து வருகிறது.இந்தியாவில் கொரோனா தொற்று மற்ற நாடுகளை ஒப்பிடும் போது குறைவு.கேரளா தமிழகம் மகாராஷ்ட்ரா ஆந்திரா போன்ற மாநிலங்களில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்றம் இறக்கமாகவே இருந்து வருகிறது. கொரோனா தடுப்புஊசி இன்னும் மக்களின் பயன்பாட்டிற்கு வராதநிலையில் அரசியல் கட்சிகள் பீகார் தேர்தல் அறிக்கையில் இலவசமாக கொரோனா தடுப்பூ ஊசி மருந்து வழங்கப்படும் என்று அறிவிக்கும் அளவிற்கு சென்றிருக்கிறது.

கொரோனா காரணமாக இந்தியாவில் அதிகமாகப் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிராவும் ஒன்று. அங்கு கொரோனா தடுப்புப் பணிகளுக்கு பெரிய அளவில் பலன் இல்லை. இந்நிலையில் அம்மாநில துணை முதல்வர் அஜித் பவாருக்குக் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.