Asianet News TamilAsianet News Tamil

உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு... 1,05,218 பேரின் உயிர்கள் ஊசலாட்டம்..!

 தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
 

Corona impact peaks ... 1,05,218 lives swayed ..!
Author
Tamilnadu, First Published May 13, 2021, 5:19 PM IST

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Corona impact peaks ... 1,05,218 lives swayed ..!

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16 கோடியை தாண்டி உள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 1610,80,581 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 13,88,63,472 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 33 லட்சத்து 35 ஆயிரத்து 018 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 1,88,72,091 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,05,218 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.Corona impact peaks ... 1,05,218 lives swayed ..!

கொரோனா அதிகம் பரவிய நாடுகளில், அமெரிக்காவில் பாதிப்பு - 3,35,86,136,  உயிரிழப்பு - 5,97,785 , குணமடைந்தோர் -  2,66,20,229. இந்தியாவில், பாதிப்பு - 2,37,02,832,  உயிரிழப்பு - 2,58,351,  குணமடைந்தோர் -  1,97,28,436. பிரேசிலில், பாதிப்பு - 1,53,61,686,  உயிரிழப்பு - 4,28,256,  குணமடைந்தோர் -  1,39,24,217
பிரான்ஸில்  பாதிப்பு -  58,21,668,  உயிரிழப்பு -  1,07,119, குணமடைந்தோர் - 49,60,097 ஆக உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios