கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பத்திரிகையாளர்   ஒருவர், மன அழுத்தத்தினால் நான்காவது மாடியில் இருந்து குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பத்திரிகையாளர்  ஒருவர், மன அழுத்தத்தினால் நான்காவது மாடியில் இருந்து குதித்த சம்பவம் நடந்துள்ளார்.இளம் பத்திரிகையாளர் கொரோனா உறுதி செய்யப்பட்டு, கடந்த மாதம் 24-ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் உயர் சிகிச்சை மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரை நான்காவது மாடியில் உள்ள தனிமைப்படுத்தும் வார்டில் தனியறையில் அனுமதித்துள்ளனர். அவர் கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாகவும், கற்பனை உருவங்கள் கண்ணில் தெரிவதாக கூறியதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  இந்நிலையில் இன்று அவர் நான்காவது  மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். அவரது அறையில் உள்ள கழிவறை ஜன்னலில் இருந்த இரும்பு கிரில் கம்பி பெயர்த்து எடுக்கப்பட்டுள்ளது. அதன் வழியாக அவர் வெளியே குதித்துள்ளார் என்று தெரிய வந்துள்ளது. தற்போது அவர் பலத்த காயங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கடுமையான எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளன. மிகவும் ஆபத்தான கட்டத்தில் உள்ளார்.


 
"பெரிய பணக்காரர்கள் பிரபலங்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்த சம்பவங்கள் கொரோனா நோயாளிகளை ரெம்பவே அப்செட்டாக்கியுள்ளது. கொரோனா வந்தால் அவ்வளவு தான் உயிர் போய் விடும் என்கிற பயம் மக்களிடமும் நோயாளிகளிடமும் தொற்றியுள்ளதால் எவ்வளவு பெரிய தன்னபிக்கையுள்ள மனிதர்களும் எளிதாக மன தைரியத்தை இழந்துவிடுகிறார்கள்.

தற்போது கொரோனா நோயாளிகள் தங்களது தன்னம்பிக்கையை இழந்து தற்கொலை எண்ணத்தை கையிலெடுத்து வருகிறார்கள். தமிழகத்தில் மதுரையில் கொரோனா தனிமைப்படுத்தல் மையத்தில் இருந்து இப்படி ஒருவர் தற்கொலைக்கு முயன்று அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி வருகின்றது. இதற்கு அரசாங்கம் இந்த நோயாளிகளுக்கு முதலில் மாத்திரை மருந்துகள் வழங்குவதோடு தினந்தோறும் தன்னம்பிக்கை ஊட்டக்கூடிய வகையில் அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்தால் மட்டுமே இது போன்ற சம்பவங்களை தடுக்க முடியும்.இப்படியே விட்டால் தற்கொலை எண்ணிக்கை கூடிவிடும்" என்கிறார் எம்எல்ஏ டாக்டர். சரவணன்.