கொரோனாவால் பாதித்த காஞ்சிபுரத்தை சேர்ந்த என்ஜினியர் வேகமான குணமடைந்து வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவருக்கு சிறப்பான சிகிச்சை வழங்கப்பட்டதில் அவர் குணமடைந்துள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். அதே நேரத்தில் தமிழகத்தில்   முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதால்  யாரும் அதற்கு அச்சப்பட வேண்டிய அவசியமில்லை எனவும்  தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கமளித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து சட்டமன்றத்தில் இன்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது .  அதன்மீது அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பரமசிவம் ,  திமுக உறுப்பினர் சரவணன் ,  காங்கிரஸ் உறுப்பினர் ஆர்.ராமசாமி , முஸ்லிம் லீக் கட்சியின் உறுப்பினர் அபூபக்கர் உள்ளிட்டோர் பேசினர் அதில் கொரோனா  வைரசை விட  அது தொடர்பான வதந்திகள் வேகமாக பரவுகிறது .  இதில் நடவடிக்கை எடுக்க அமைச்சர்கள் கூட மறுக்கிறார்கள் .  ஒரளவுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும்  விழிப்புணர்வு மேலும் அதிகப்படுத்த வேண்டும் ,  மக்கள் தற்காப்புக்காக முகக்கவசம் ,  கிருமிநாசினி, போன்றவை   எங்கும் கிடைப்பதில்லை என்று கூறுகின்றனர் என்றனர்.   இதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், 

வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் ,  சுகாதாரப் பணியாளர்கள் ஓய்வின்றி பணியாற்றி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர் . இதில்  யாரும் பதற்றமடைய வேண்டாம் .  நம்மிடம் 10 லட்சம்  மாஸ்க் உள்ளது .  தேவையான தடுப்பு மருந்துகளும் உள்ளன .  கொரோனாவால் பாதித்த  காஞ்சிபுரம் என்ஜினியருக்கு ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் தேவையான மருந்துகளைக் கொடுத்து குணப்படுத்தி உள்ளேன் .  முதலில் பாசிட்டிவான ரிப்போர்ட் வந்தது ,  தற்போது அவருக்கு எடுத்து 2 டெஸ்டிலும் நெகட்டிவ் ரிபோர்ட்  வந்துள்ளது.  அவர் வேகமாக குணமடைந்து வருவதால் அவரை டிஸ்சார்ஜ் செய்ய தயாராக உள்ளோம் என்றார்.