அரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்தாலும் அதே நேரத்தில் உயிரிழப்போர் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில், அரியானா பாஜக முதல்வர் மனோகர்லால் கட்டாருக்கு பரிசோதனை செய்ததில் அவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இதுதொடர்பாக மனோகர் லால் கட்டார் டுவிட்டரில் பதிவில்;- வீட்டில் என்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறேன். ஒரு வாரமாக தன்னை சந்தித்தவர்கள் அனைவரும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். கடந்த வாரம் தன்னுடன் தொடர்பில் இருந்த அமைச்சர்கள், அதிகாரிகள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்  என கூறியுள்ளார். 

மேலும், அரியானா சட்டமன்ற சபாநாயகர் கியன் சந்த் குப்தா மற்றும் 2 எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.