Coronavirus: காலமானார் ஜி.கே.வாசனின் வலதுகரம்.. 3வது அலையில் பலியான முதல் விஐபி..!
மதுரை தொகுதி முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ்.ராம்பாபு (60). இவர் உடல் நலக்குறைவு காரணமாக மதுரையில் உள்ளஅப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 2 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று இருப்பது உறுதியானது.
தாமாக தலைவர் ஜி.கே.வாசனின் வலதுகரமாகமும், நம்பிக்கைக்குரியவராகவும் இருந்து வந்த மதுரை முன்னாள் எம்.பி.யும், தமாகா பொதுச்செயலாளருமா ஏஜிஎஸ் ராம்பாபு (60) கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.
தாமாக தலைவர் ஜி.கே.வாசனின் வலதுகரமாக அறியப்பட்ட மதுரை தொகுதி முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ்.ராம்பாபு (60). இவர் உடல் நலக்குறைவு காரணமாக மதுரையில் உள்ளஅப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 2 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று இருப்பது உறுதியானது. எனவே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு ராம்பாபு திடீரென உயிரிழந்தார்.
ராம்பாபு, கடந்த 1960-ம் ஆண்டு பிறந்தவர். அவர்களது குடும்பம் காங்கிரஸ் பராம்பரியமிக்க அரசியல் குடும்பம் ஆகும். அவரது தந்தை ஏ.ஜி.சுப்புராமன் காங்கிரஸ் சார்பில் 1980,1984-ம் ஆண்டு என இருமுறை மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி. ஆனவர். அதில் 1984-ம் ஆண்டு தேர்தலில் அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரான சங்கரய்யாவை எதிர்த்து வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்பின் ராம்பாபு 1989, 1991-ம் ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி சார்பிலும், 1996-ம் ஆண்டு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பிலும் போட்டியிட்டு வெற்றி பெற்று 3 முறை மதுரை எம்.பி.யாக இருந்தார்.மதுரையில் அதிகமாக காணப்படும் சௌராஷ்டிரா மக்கள் இடையே நல்ல செல்வாக்கு உள்ளவர். ராம்பாபுவும், அவரது தந்தை சுப்புராமனும் தொடர்ச்சியாக 5 முறை மதுரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளனர். அதில் ராம்பாபு 1989-ம் ஆண்டு தி.மு.க. வேட்பாளர் வேலுச்சாமியையும், 1991-ம் ஆண்டு கம்யூனிஸ்டு கட்சியின் மோகனையும், 1996-ம் ஆண்டு ஜனதா கட்சியின் சுப்பிரமணியசுவாமியும் எதிர்த்து வெற்றி பெற்றார். அவர் 1998-ம் ஆண்டு சுப்பிரமணியசுவாமியுடன் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். அதன்பின் அவர் தேர்தலில் போட்டியிடவில்லை. அவரது மறைவு பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.