கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கோவை தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜூனன் குணமடைந்து வீடு திரும்பினார். 

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கோவை தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜூனன் குணமடைந்து வீடு திரும்பினார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பணியில் ஈடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள், அரசியல் பிரமுகர்கள் அடுத்தடுத்து தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ஜூனனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, , எம்.எல்.ஏ அம்மன் அர்ஜூனன் கோவை சிங்கா நல்லூர் பகுதியில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் எம்.எல்.ஏவின் மகள், மருமகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இவர்கள் அனைவருக்கும் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

இந்நிலையில், இன்று அதிமுக எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜூனன் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளார். அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவர்கள் அனைவருக்கும் தற்போது கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து அம்மன் அர்ஜூனனும், அவரது குடும்பத்தினரும் வீடு திரும்பியுள்ளனர். ஏற்கனவே கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏ பழனி குணமடைந்து வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.