சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவரும் அமமுக பொருளாளர் வெற்றிவேல் தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவரும் அமமுக பொருளாளர் வெற்றிவேல் தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொருளாளரான வெற்றிவேலுக்கு சளி, காய்ச்சல் காரணமாக கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதில், அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனோ தொற்றின் காரணமாக வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து, கடந்த 6ம் தேதி சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தனர். 

இந்நிலையில், நேற்று முதல் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியானது. தற்போது வரை எந்த முன்னேற்றமும் இல்லாததால் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஏற்கனவே அவருக்கு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர் என்பதால் நிலைமை மோசமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், டிடிவி.தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள், குடும்பத்தினர் வருத்தத்தில் உள்ளனர்.